Shadow

இப்படம் ஜெயிக்கும்

ippadai vellum movie

‘இப்படை வெல்லும்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, “முதல் முறையாக நான் உதய் கூட நடிக்கிறேன். புதுசா நடிக்க வர்றப்ப ஒரு பயம் இருந்திருக்கும். ஆனா இப்ப நல்லா நடிக்கிறார். மானிட்டர் பார்த்து, சரியா நடிச்சிருக்கேனே எனப் பார்த்து சரி பண்ணிக்கிறார். எனக்கு மானிட்டர் பார்க்கும் பழக்கமில்லை. ஏன்னா எண்பதுகளில் நாங்க நடிக்கிறப்ப மானிட்டரோ கேரவனோ இல்லை. நான் பஸ் ஓட்டணும் எனச் சொன்னாங்க. நான் ஏன் பஸ் ஓட்டணும்? டூப் போட்டு எடுத்துக்கலாம்லன்னு கேட்டேன். இல்ல, அதுஒரு ஸ்ட்ராங் கேரக்டர் நீங்க தான் பண்ணணும்னு கெளரவ் சொன்னார். ‘உங்களுக்காக இந்தக் கேரக்டரை இப்படிச் செஞ்சிருக்கோம்!’ என ஒரு டைரக்டர் சொல்றப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ரொம்ப பெருமையாகவும் இருக்கு. அவர் கேட்டதால், நானே பஸ் ஓட்டிட்டேன். கொஞ்சம் பக்கு பக்குன்னு இருந்தது. ஏன்னா என்னை நம்பி பஸ்சில் 20 பேர் உட்கார்ந்தாங்க. நல்லா பண்ணியிருக்கேன். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.

“ஒரு சின்ன கேரக்டர்தான். ஆனா பவர்ஃபுல் கேரக்டர். நிஜமாவே ஒரு பி.டி.சி. பஸ்ஸை ஓட்டியிருக்காங்க. ஒருநாள் ட்ரெயினிங் எடுத்துக்கிட்டு அடுத்த நாளே ஓட்டினாங்க. படத்தில் முதல் பத்து நிமிஷம் நான் வரவே மாட்டேன். டேனியல் பாலாஜிக்கு செமயான பில்டப் இருக்கு படத்தில். டெரரான வில்லனா கலக்கியிருக்கார். ஒரு வீட்டுக்குள்ள லைவ் ஃபைட்டு ஒன்னு எடுத்தோம். எங்க இரண்டு பேருக்குமே சரியான சண்டை. திலீப் மாஸ்டர் வந்து நல்லா அடிச்சுக்கோங்க, அப்ப தான் லைவ் ஃபைட் நல்லா வரும்னு சொல்லி செமயா அடி வாங்க வச்சார். 70 நாள் ஷூட்டிங்கில், 60 நாள் ஃபைட் மாஸ்டர் கூடவே இருந்தார். அவ்ளோ ஆக்ஷன் சீக்வென்ஸ் படத்தில் இருக்கு. ஏன்டா இந்தப் படத்தை ஒத்துக்கிட்டோம்னு நினைக்க வச்சுட்டாங்க.

ஒரு டேபிளைச் சுத்திச் சுத்தி கேமிரா ரிமோட் கன்ட்ரோலில் ஓடும். இத்தனை படம் நடிச்சிருக்கேன், இப்படிலாம் நான் பார்த்ததே இல்லை. நான் கேமிரா மேனிடம் (ரிச்சார்ட் M.நாதன்), இதெல்லாம் என்ன புதுசா இருக்குன்னு கேட்டேன். புதுசுலாம் இல்லை; எப்பத்தில் இருந்தோ இருப்பது தான்; கெளரவ் தான் இதையெல்லாம் உபயோக்கிறார் என்றார்.

ஆர்.கே.சுரேஷ் கேரக்டரில் அரவிந்த் சாமியைத்தான் கேட்டோம். அவர் நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் எனச் சொல்லிட்டார். இவரிடம் நான் உண்மையாவே அடி வாங்கினேன். அப்படி உள்வாங்கி அடிச்சிருக்கார். உண்மையைச் சொல்லணும்னா, டூப் ஷாட்ல கூட நான் தான் நடிப்பேன் என ரொம்ப நல்லா பண்ணியிருக்கார். படம் நல்லா வந்திருக்கு” என்றார் உதயநிதி ஸ்டாலின்.

“சூரியையும், உதயநிதி ஸ்டாலினையும் ஒன்னா நடிக்க வச்சா நல்லாயிருக்கும்னு நான் தான் முதலில் புக் பண்ணேன். ஆனா இது அவங்க காம்பினேஷனில் மூனாவது படமா வெளில வருது. இது ஹீரோயிச படமில்லை. ஒரு காமன் மேன் தன் அறிவால் ஜெயிக்கிறான். லோகோ பார்த்தீங்கன்னா தெரியும். ஸ்ட்ரிங் (நாண்) இருக்காது வில்லுக்கு. ஏன்னா அறிவுக்கான குறியீடா அதை நான் வைக்கலை” என்றார் இயக்குநர் கெளரவ்.

இந்தப் படம் கண்டிப்பா வெற்றி பெறுமென நம்பிக்கையாக இருக்கிறது லைகா ப்ரொக்ஷன்ஸ்.