Shadow

Tag: இயக்குநர் சரபணன்

கூகுள் குட்டப்பா விமர்சனம்

கூகுள் குட்டப்பா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ எனும் மலையாளப் படத்தினைத் தமிழில் மீள் உருவாக்கம் செய்து இயக்கியுள்ளனர் இயக்குநர்களான சபரியும் சரவணனும். பிக்பாஸ் புகழ் தர்ஷனும் லாஸ்லியாவும் அறிமுகமாகியுள்ளனர். தெனாலிக்குப் பிறகு, கே.எஸ்.ரவிகுமாரின் RK செல்லூலாய்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளிவரும் இரண்டாவது படமிது. படம் தொடங்குவதற்கு முன் முறையாக அனைவருக்கும் நன்றி சொல்லியுள்ளார் கே.எஸ்.ரவிகுமார். மகனை வெளியூருக்கு அனுப்ப விரும்பாத தந்தை சுப்ரமணிக்கும், வெளிநாட்டில் பணி புரிய விரும்பும் மகன் ஆதிக்கும் நடக்கும் பாசப்போராட்டத்தில் படம் தொடங்குகிறது. தன் லட்சியத்தில் உறுதியாக இருந்து வெளிநாடு செல்லும் ஆதி, தந்தைக்கு உதவியாக ஒரு ரோபாவை ஹோம் நர்ஸாகப் பயன்படுத்திக் கொள்ள தருகிறான். முதலில் ரோபோவை வெறுக்கும் சுப்ரமணி, போகப் போக ரோபோவைத் தன் மகனாகப் பாவிக்கத் தொடங்கி விடுகிறார். ரோபோவின் சோதனை ஓட்ட காலம் ம...