Shadow

Tag: இயக்குநர் பாபு விஜய்

சட்டென்று மாறுது வானிலை – சமகால பிரச்சனைகளைப் பேசும் ரொமான்டிக் த்ரில்லர்

சட்டென்று மாறுது வானிலை – சமகால பிரச்சனைகளைப் பேசும் ரொமான்டிக் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
BV Production நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, நடிகர் ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை” ஆகும்.மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மேலும், நாட்டில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் தைரியமாக எடுத்துரைக்கிறது. வரும் மே 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இயக்குநர் சசி, “பாபு விஜய் என்னிடம் வந்து ‘நான் ஒரு படம் இயக்கப் போகிறேன்’ என்று சொன்னபோது, முதலில் நான் ‘யார் தயாரிப்பாளர்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நான்தான் சார் தயாரிப்பாளர்’ என்றார். அதைக் கேட்டவுடன் எனக்குக்...
BV Frames | களவும் காதலும் – ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர்

BV Frames | களவும் காதலும் – ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர்

சினிமா, திரைத் துளி
பிவி ஃப்ரேம்ஸ் (BV Frames) நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.முன்னணி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இந்த புதிய திரைப்படத்திற்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துப் படக்குழுவினரை வாழ்த்தினார். இப்படத்தின் துவக்க விழாவில், தயாரிப்பாளர் தனஞ்செயன் கிளாப் போர்டு அடித்து இயக்குநர் சசி, கேமராவை ஆன் செய்து படக்குழுவிற்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.முன்னணி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய, பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மிக முக்கிய சமூக பிரச்சனை ஒன்றைக் காதலும் த்ரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் ரசிகர்கள் விரும்பும் ப...