
“DNAவின் வெற்றி – ஒரு தலைமுறைக்கான வாசலைத் திறக்கும்” – ராஜு முருகன்
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'டிஎன்ஏ (DNA)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய நடிகர் ரமேஷ் திலக், ''பத்து வருடங்களுக்கு முன் இதே மேடையில் தான் இயக்குநர் நெல்சன் இயக்கிய 'ஒரு நாள் கூத்து' படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. அவர் தொடர்ந்து நிறைய படங்களை இயக்க வேண்டும் ஏனெனில் அவர் ஒரு நேர்மையான இயக்குநர். அவர் பத்து ஆண்டுகளுக்கு முன் அவர் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு இப்போது தான் இந்தப் படத்தில் வாய்ப்பு அளித்திருக்கிறார். பொருத்தமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே அழைத்து வாய்ப்பளிப்பார்” என்றார்.
இயக்குநர் ராஜூ முருகன், ''என் மனதிற்கு நெருக்கமாக இருப்பவர்கள் அனைவ...




