Tag: ஐரா திரைப்படம்

ஐரா – இரட்டை வேடத்தில் நயன்
தொடர்ந்து தன்னுடைய தோற்ற பொலிவாலும், சீரிய நடிப்பு திறமையினாலும் திரை வர்த்தகத்தில் மட்டுமன்றி, ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து தன்னுடைய ஆளுமையைச் செலுத்தி வரும் நயன்தாரா தன்னுடைய அடுத்த படமான "ஐரா" படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
அறம் படத்தைத் தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன் கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷ் படக்தொகுப்பு செய்ய, அவள் படத்தின் கலை இயக்குநர் சிவசங்கர் அரங்கு அமைக்க, டி. ஏழுமலை நிர்வாக தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன் கலை அரசன், யோகி பாபு, ஜே பி ஆகியோருடன் பலர்...



