Shadow

ஐரா – இரட்டை வேடத்தில் நயன்

Airaa---Double-Nayan

தொடர்ந்து தன்னுடைய தோற்ற பொலிவாலும், சீரிய நடிப்பு திறமையினாலும் திரை வர்த்தகத்தில் மட்டுமன்றி, ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து தன்னுடைய ஆளுமையைச் செலுத்தி வரும் நயன்தாரா தன்னுடைய அடுத்த படமான “ஐரா” படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

அறம் படத்தைத் தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன் கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷ் படக்தொகுப்பு செய்ய, அவள் படத்தின் கலை இயக்குநர் சிவசங்கர் அரங்கு அமைக்க, டி. ஏழுமலை நிர்வாக தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன் கலை அரசன், யோகி பாபு, ஜே பி ஆகியோருடன் பலர் நடித்துள்ளனர்.

“நயன்தாராவுடன் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரியது. அறம் படத்தைத் தொடர்ந்து உச்சத்தை நோக்கிப் போய் கொண்டிருக்கும் அவருடைய திரையுலக அந்தஸ்து “ஐரா” படத்தின் மூலம் மேலும் உயரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. சர்ஜுன் கதை சொன்ன மாத்திரத்தில் இந்தக் கதை நயன்தாராவுக்கு மிகவும் சவாலான, அதே சமயம் ரசிகர்களை மிகவும் கவரும் கதை எனப் புரிந்தது. இதுவரை இரட்டை வேடத்தில் நடித்திராத நயன்தாரா இந்தப் படத்தில் நடிக்கிறார். “ஐரா” என்ற வார்த்தை யானையைக் குறிக்கும். யானை பலத்தைக் குறிப்பிடும் ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டிருக்கும் இந்தப் படம் ஒரு ஹாரர் படமாகும்” என்கிறார் தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே.ராஜேஷ்.