Shadow

Tag: காதல் சுகுமார்

போலீஸ் ஃபேமிலி விமர்சனம் | Police Family review

போலீஸ் ஃபேமிலி விமர்சனம் | Police Family review

சினிமா, திரை விமர்சனம்
ஒருவனின் பழிவாங்கும் உணர்வு, சம்பந்தமே இல்லாமல் எத்தனையோ பேர் இறப்பதற்குக் காரணமாகிவிடுகிறது. யாரோ ஒருவன், முன்னால் ரெளடி தனாவின் மகனைக் கொன்றுவிட, காவல்துறையினர்தான் அவனைக் கொன்று விடுவதாகத் தனா தவறாக நினைத்துக் கொள்கிறான். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் வெஞ்சினத்துடன் தேடித் தேடிக் கொல்வதுதான் போலீஸ் ஃபேமிலியின் கதை.தனாவாகப் பருத்தி வீரன் சரவணன் நடித்துள்ளார். மகனின் மரணத்திற்குக் காரணமான அனைவரது குடும்பத்தையும் கொன்றே தீருவது என்று ஆவேசமாக உள்ளார். அப்படி சிலரைக் கொன்றதும், வலியே இல்லாமல் இறந்து விடுவார்கள் எனக் குடும்பத்தாரை மட்டும் கொல்ல ஆணையிடுகிறார். ஏட்டு சுரேஷாக மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் காதல் சுகுமார். அவ்வளவு கனமான பாத்திரம் ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தைத் தருமளவிற்கு சுகுமார் அனுகூலமான நடிப்பை வழங்கவில்லை. அனிதா எனும் கதாநாயகி...
கும்பாரி விமர்சனம்

கும்பாரி விமர்சனம்

இது புதிது, திரை விமர்சனம்
இப்பொழுதெல்லாம் பேய்ப்படங்கள் நகைச்சுவையாக இருக்கிறது. நகைச்சுவைப் படங்கள் என்று சொல்லிக் கொள்ளப்படும் படங்களைப் பார்க்க திரையரங்கு வாசலை மிதிக்கவே பயமாக இருக்கிறது.  சினிமா திரைப்படங்களின் வகைமைகளில் மிகக் கடினமானது நகைச்சுவைத் திரைப்படங்கள் தான். அதை சிலர் நினைப்பது போல் அவ்வளவு எளிதாக எழுதிவிடவும் முடியாது, எடுத்துவிடவும் முடியாது.  ஆனால் சினிமாத்துறையின் வெளியில் இருந்து பார்க்கும் சிலருக்கு நகைச்சுவைப் படங்களை எளிதாக எடுத்துவிடலாம் என்கின்ற நம்பிக்கை இருக்கும் போலத் தெரிகிறது. எனவே வருவோர் போவோர் எல்லாம் நகைச்சுவைப் படம் எடுக்கிறோம் என்று சொல்லி, எதையோ எடுத்து வைக்கிறார்கள். அவர்களுக்குத் தயாரிப்பாளர்களும் கிடைக்கிறார்கள் என்பது அதைவிட பெரும்கொடுமை. அந்த வரிசையில் நாங்கள் நகைச்சுவைப் படம் எடுத்திருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டு பார்வையாளர்களைச் சோதிக்க வந்திருக்கும் அடுத்த பட...