Shadow

Tag: கூல் சுரேஷ்

இங்க நான் தான் கிங்கு விமர்சனம்

இங்க நான் தான் கிங்கு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வெற்றிவேல், ஜமீன் வீட்டில் பெண் எடுக்கிறார். தான் சம்பந்தம் செய்யவுள்ளது திவாலான ஜமீன் எனத் தெரியாமல், கல்யாணம் முடிந்ததும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். ஏமாற்றத்துடனே தன் வாழ்க்கையைத் தொடரும் வெற்றிவேலின் வீட்டில், சென்னைக்கு வெடிகுண்டு வைக்க வரும் பயங்கரவாதி ஒருவன் எதிர்பாராதவிதமாக இறந்து விடுகிறான். பிறகு என்னானது என்பதே படத்தின் கதை. ஜமீன் விஜயகுமாராகத் தம்பி ராமையா அறிமுகமானதில் இருந்து படத்தின் கலகலப்பு இரட்டிப்பாகிறது. படத்தினைத் தாங்கும் கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தியுள்ளார். அவரது மகனாக நடித்துள்ள பாலசரவணன், சிற்சில காட்சிகளில் மட்டும் அசத்தியுள்ளார். ஆளுநர் அலுவலகத்தில், சந்தானம் சமாளிக்கும் பொழுது, குழப்பத்துடன் தரும் ரியாக்ஷங்களில் ரசிக்க வைக்கிறார். வெற்றிவேலின் மனைவி தேன்மொழி பாத்திரத்தில், பிரியாலயா நாயகியாக அறிமுகமாகியுள்ள...
கூல் சுரேஷின் ‘சித்திரமே சொல்லடி’

கூல் சுரேஷின் ‘சித்திரமே சொல்லடி’

சினிமா, திரைத் துளி
'சித்திரமே சொல்லடி' எனுன் திரைப்படத்தை, எம்.ஜி.எம் ப்ரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் கௌரி சங்கர் தயாரித்து இயக்குகிறார். இப்படத்தில் கூல் சுரேஷ் கதாநாயகனாகவும், கோபிகா நாயர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் தெனாலி, மகாநதி சங்கர், தேனி முருகன், விஜய் கணேசன், சுமதி, அஞ்சலி டேவி, அப்சர் மற்றும் பெரெரொ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஒளிப்பதிவை மகி பாலனும், ஒலிப்பதிவை ஆதிஷ் உத்ரியனும் செய்துள்ளனர். துப்பறியும் பாணியில் உருவாக்கபட்டுள்ள இப்படம் சென்னை, ஏலகிரி மற்றும் பாண்டிசேரி ஆகிய பகுதிகளில் படமாக்கப் பட்டுள்ளது. நவம்பர் மாதம் படத்தைத் திரைக்குக் கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தைப் பற்றி இயக்குநர் கௌரி சங்கர் கூறுகையில், “இந்தப் படம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். பெண்கள் பாலியல் தொல்லைகளிலிருந்தும், தங்களை கேலி...