32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கூல் சுரேஷின் ‘சித்திரமே சொல்லடி’

Dinesh R சேலம் Published: 09/10/2018 2 நிமிட வாசிப்பு Updated: 11/10/2018 சினிமா
எழுத்து அளவு:

Cool-Suresh-in-SIthiramae-solladi

‘சித்திரமே சொல்லடி’ எனுன் திரைப்படத்தை, எம்.ஜி.எம் ப்ரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் கௌரி சங்கர் தயாரித்து இயக்குகிறார். இப்படத்தில் கூல் சுரேஷ் கதாநாயகனாகவும், கோபிகா நாயர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் தெனாலி, மகாநதி சங்கர், தேனி முருகன், விஜய் கணேசன், சுமதி, அஞ்சலி டேவி, அப்சர் மற்றும் பெரெரொ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஒளிப்பதிவை மகி பாலனும், ஒலிப்பதிவை ஆதிஷ் உத்ரியனும் செய்துள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

துப்பறியும் பாணியில் உருவாக்கபட்டுள்ள இப்படம் சென்னை, ஏலகிரி மற்றும் பாண்டிசேரி ஆகிய பகுதிகளில் படமாக்கப் பட்டுள்ளது. நவம்பர் மாதம் படத்தைத் திரைக்குக் கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் கௌரி சங்கர் கூறுகையில், “இந்தப் படம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். பெண்கள் பாலியல் தொல்லைகளிலிருந்தும், தங்களை கேலி செய்பவர்களிடமிருந்தும் தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் இப்படம் உணர்த்தும்” என்று கூறியவர் தயாரிப்பாளர் சங்கத்துக்குக் கோரிக்கை ஒன்றையும் வைத்தார்.

“முன்பெல்லாம் எம்.ஜி.யார், சிவாஜி படங்கள் ரிலீஸ் ஆகும்போது மூன்று தர வரிசைகள் இருந்தன. அதில் மூன்றாவது தர வரிசையானது மிகக் குறைந்த விலையுடைய டிக்கெட்டுகளாகவும், மற்ற தரவரிசைகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இருக்கைகளை உடையதாகவும் இருக்கும், இதனால் அதிகப்படியான மக்கள் திரையரங்குக்கு வந்தனர். ஆனால் இப்போது ஒரே ஒரு தரவரிசை மட்டுமே உள்ளது. அதை மாற்றி மீண்டும் முதலாம், இரண்டாம், மூன்றாம் தரவரிசைகள் என்று நிர்ணயித்து நாற்பது அல்லது ஐம்பது ரூபாய்க்கு டிக்கெட்டுகளை விற்றால் அதிகபடியான மக்கள் மீண்டும் திரையரங்குக்கு வர வாய்ப்புள்ளது. திரையுலகம் மீண்டும் செழிக்க வாய்ப்புள்ளது “ என்று தனது ஆதங்கத்தையும் கூறினார்.

படத்தின் நாயகன் கூல் சுரேஷ் கூறுகையில், “நான் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். எனக்கு ஜோடியாக மலையாள நடிகை கோபிகா நாயர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கமலி ரமேஷ்குமார், ஸ்ரீ கமலி ஆகியோர் நடித்துள்ளனர். நான் முதல்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தக் கதாப்பாத்திரத்தை திரையில் கொண்டு வர கடினமாக உழைத்துள்ளேன். என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்த இயக்குநர் கௌரி சங்கர் அவர்களுக்கு நன்றி “ என்று கூறினார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.