Shadow

Tag: சண்முகபாண்டியன்

கொம்புசீவி விமர்சனம் | Kombuseevi review

கொம்புசீவி விமர்சனம் | Kombuseevi review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன், கிட்டத்தட்ட 2015-இலேயே சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி விட்டார். ஆயினும் கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமே 3 படங்கள் தான் நடித்திருக்கிறார். முதல் 3 படங்களிலுமே கடமைக்குத் தங்கள் கைக்கு அடக்கமாக இயக்குநீர் ஒருவரைப் போட்டு இஷ்டத்துக்குப் படம் எடுத்ததன் விளைவாக இன்னுமே பெரிய பிரேக் கிடைக்காமல் வலம் வருகிறார். இப்போது தான் பொன்ராம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஒரு இயக்குந்ரிடம் கதை கேட்டு நடித்திருக்கிறார். ஆனால் அவர் கதை கேட்ட நேரம் பொன்ராம் சுமார் படங்களையே தந்து போராடிக் கொண்டிருக்கிறார். இவ்விருவருக்குமே இப்படம் மிக முக்கியமானதொன்று என்பதால் எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்தது. வழக்கமான பொன்ராம் படங்களைப் போலவே, “என்னப்பா அலப்பறைய குடுத்துட்டுருக்கீங்க?" எனச் சொல்லும் தென்மாவட்ட வட்டாரத்தைச் சுற்றிய ஒரு கதை தான். மதுரைப் பகுதியில் உள்ள கிராமத்தில்...
படை தலைவன் படத்தில் இணையும் ராகவா லாரன்ஸ்

படை தலைவன் படத்தில் இணையும் ராகவா லாரன்ஸ்

சினிமா, திரைத் துளி
“புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் மறைவுக்குப் பிறகு, ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தில், சிறப்பு தோற்றத்தில் நான் நடிக்கத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ பார்த்து இயக்குநராகிய நான் மாஸ்டரை எப்படியாவது இந்தப் படத்தில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சிக்கு மட்டுமே இடமிருந்தது. இதை மிகுந்த தயக்கத்துடன் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர் எந்த யோசனைக்கும் இடம் தராமல், ‘நான் நடித்து தருகிறேன். எவ்வளவு நிமிடம் நான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி’ என்றார்.இதைக் கேட்டதும் இயக்குநராக எனக்கு மிகுந்த சந்தோஷம். கேப்டன் அவர்கள் மேல் வைத்த மரியாதைக்கும், அவர் சொன்ன வார்த்தையைக் காப்...
மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்

மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்

இது புதிது, திரை விமர்சனம்
கிறிஸ்துமஸ் பிறக்க இருக்கும் நள்ளிரவு நேரத்தில் தன் நான்கு வயது மகளைக் கூட்டிக் கொண்டு பம்பாய் நகர வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறாள் படத்தின் நாயகியான மரியா (கத்ரீனா கைஃப்).  எப்படி தன் மகன் இயேசு பிரானை ஏரோது மன்னனின் கொலைக்களத்தில் இருந்து காப்பாற்ற மரியாளும் யோசேப்பும் முயன்று அந்த நடு இரவில் ஒடிக் கொண்டு இருந்தார்களோ, அதே போல் தன் மகளின் நன்மைக்காக இந்த மரியாவும் தன்னந்தனியே ஒடிக் கொண்டிருக்கிறாள்.  இந்த மரியாவின் மகளுக்கு அப்படி என்ன ஆபத்து வந்தது; தன் மகளைக் காக்க மரியா எடுத்த நடவடிக்கை என்ன என்பதே இந்த “மெரி கிறிஸ்துமஸ்” திரைப்படத்தின் ஒற்றை வரிக் கதை.ஒரு திரைப்படத்தில் நாம் எதிர்பார்க்கின்ற திருப்பங்களும்  எதிர்பார்க்கும் திரைக்கதையும் இருக்கும் போது,  பல தருணங்களில் சோர்வாகவும் எரிச்சலாகவும் இருக்கும்.  சில தருணங்களில் கதை போகும் போக்கை கச்சிதமாக கணித்துவிட்டோம் என்கின்ற மமதை...