32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

சமுத்திரக்கனி

50 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 3 / 4
செய்திகள் வரிசை (பக்கம் 3)
அடுத்த சாட்டை விமர்சனம் சினிமா

அடுத்த சாட்டை விமர்சனம்

தலைப்பிலேயே கதை சொல்லிவிடுகின்றனர் சாட்டை படத்தின் இயக்குநர் அன்பழகன். அப்பா கலை கல்லூரியில், ஒரு டிப்பார்ட்மென்ட்டின் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவர்களின் வகுப்பில் கதை நிகழ்கிறது. சாதி வெறியில் ஊறிய பிரின்சிபல் சிங்க பெருமாளின் மகன் பழனியால் வகுப்பில் சாதிப் பிரிவினை ஏற்படுகிறது. படத்தின் முதற்பாதியில் மகன் திருந்தி விட, இரண்டாம் பாதியில் பிரின்சிபலும் திருந்தி விட படம் சுபமாய் முடிகிறது. சமுத்திரக்கனி முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி வரை சாட்டையை அட்வைஸ்களாகச் சுழற்றியபடியே உள்ளார். அவருக்கு இதே […]

29/11/2019 Dinesh R
காப்பான் விமர்சனம் சினிமா

காப்பான் விமர்சனம்

கதிர் எனும் கதிரவன், இந்திய அரசாங்கத்தைக் களங்கத்தில் இருந்து காப்பாற்றும் ஒற்றேவல் புரியும் ரகசிய இராணுவ வீரர். அவரைத் தனது பெர்சனல் பாடிகார்டாக, ஸ்பெஷல் ப்ரொடெக்ஷன் க்ரூப் (SPG) அதிகாரியாக நியமித்துக் கொள்கிறார் பிரதமர் சந்திரகாந்த் வர்மா. பிரதமரைக் கொல்லும் நடக்கும் சதிகளில் இருந்து கதிர், சந்திரகாந்தைக் காப்பாற்றிக் கொலையாளிகளைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. அயன் படத்தில், படைப்பாற்றல் மிக்கக் கடத்தல்காரராகவும்; மாற்றான் படத்தில், தந்தையின் தொழில் சாம்ராஜ்யத்தை அழிப்பவராகவும்; இப்படத்தில், நாாட்டின் பிரதமரைக் […]

21/09/2019 Dinesh R
கொளஞ்சி விமர்சனம் சினிமா

கொளஞ்சி விமர்சனம்

பெரியாரியவாதியான அப்பாசாமி, அவரது மூத்த மகன் கொளஞ்சி தவறு செய்யும்பொழுதெல்லாம் அடி வெளுத்து விடுகிறார். அதனால் கொளஞ்சி அவரது அப்பா மீது கடும்கோபத்தில் இருக்கிறான். அவர்களுக்கிடையில் பெரிதாய் ஏற்படும் விரிசல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. கொளஞ்சியாக நடித்துள்ள பதின் பருவத்துச் சிறுவன் கிருபாகரன் தான் படத்தின் நாயகன். அரிவாளை அடமானம் வைத்து ஐஸ் வாங்குவது, சக மாணவர்களுடன் சண்டையிடுவது, ஆசிரியையிடம் ஆசிரியர் காதல் கடிதம் கொடுத்தாரெனத் தருவது என எண்ணற்ற சேட்டைகள் செய்கிறான் கொளஞ்சி. அதை […]

26/07/2019 Dinesh R
கே பி 90 – ஒரே ஒரு சிகரம் சினிமா

கே பி 90 – ஒரே ஒரு சிகரம்

தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த திரு. கே. பாலசந்தர் அவர்கள். இவரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார் அவர்கள், ‘இயக்குநர் ஐயா அவர்களுக்குப் பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான் தான் ஹீரோ. இதை விட ஒரு பெருமை வேண்டுமா? என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் […]

10/07/2019 Dinesh R
வடசென்னை விமர்சனம் சினிமா

வடசென்னை விமர்சனம்

அரசாங்கம் மக்களுக்குச் செய்யும் துரோகம், வளர்த்து விட்டவருக்கு அவரது பிள்ளைகள் செய்யும் துரோகம், நட்பெனும் போர்வையில் நம்பியவர்களுக்குச் செய்யப்படும் நம்பிக்கைத் துரோகம், பழிவாங்க உறவாடிக் கெடுக்கும் துரோகம் என துரோகத்தின் அத்தனை வடிவங்களையும் கொண்டுள்ளது வடசென்னை. இப்படம், மெட்ராஸ் போலவும், காலா போலவும், ‘நிலம் எங்கள் உரிமை’ என்பதையே பேசுகிறது. வளர்ச்சியெனும் பேரில் மீனவக் குப்பங்களும், அதன் மனிதர்களும் எப்படி அந்நியப்படுத்தப்பட்டு நசுக்கப்படுவார்கள் என அமீர் பேசும் அரசியலைச் சேலம் எட்டு வழி பாதை திட்டத்தோடு பொருத்திப் […]

19/10/2018 Dinesh R
ஆண் தேவதை விமர்சனம் சினிமா

ஆண் தேவதை விமர்சனம்

முன்னாள் பத்திரிகையாளரான இயக்குநர் தாமிரா, இயக்குநர் இமயத்தையும் சிகரத்தையும் ஒன்றாக நடிக்க வைத்து ரெட்டச்சுழி எனும் படத்தை 2010 இல் எடுத்தவர். எட்டு வருடங்களுக்குப் பிறகு அவர் தனது அடுத்த படத்தை இயக்கியுள்ளார். சிறகுகள் உதிர வெண்ணிற இறக்கைகள் மேகத்தினூடே பறக்க, ஆண் தேவதை என்ற பெயர் திரையில் வருகிறது. படத்தின் தொடக்கமே, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் பற்றிய சமுத்திரக்கனியின் விளக்கத்தோடு, “தீதும் நன்றும் கற்றுத் தருவோம்”என படம் தொடங்குவது சிறப்பு. அந்தச் சிறப்பு, […]

12/10/2018 Dinesh R
60 வயது மாநிறம் விமர்சனம் சினிமா

60 வயது மாநிறம் விமர்சனம்

‘கோதி பண்ணா சாதார்ணா மைக்கட்டு (Godhi Banana Sadharna Mykattu)’ என்ற படம் கன்னடத்தில், 2016 இல் வெளிவந்தது. ‘கோதுமை நிறம் சாதாரண உடற்கட்டு’ என்பது அந்தக் கன்னடப்படத் தலைப்பின் பொருள். இயக்குநர் ராதாமோகன், ’60 வயது மாநிறம்’ எனத் தமிழில் மீள் உருவாக்கம் செய்துள்ளார். அல்சைமர் நோயால் பாதிக்கப்படும் 60 வயது கோவிந்தராஜ் காணாமல் போய்விடுகிறார். அவரையொரு பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துவிட்டிருக்கும் அவரது மகன் சிவா, தனது அலட்சியத்தால் தந்தையைத் தொலைத்துவிட்டோமெனத் தேடி அலைகிறான். சிவாவின் […]

02/09/2018 Dinesh R
கோலி சோடா 2 விமர்சனம் சினிமா

கோலி சோடா 2 விமர்சனம்

ஆட்டோ ஓட்டுநனான சிவா, பரோட்டா கடையில் வேலை செய்பவனான ஒலி, தாதாவுக்கு கார் ஓட்டிக் கொண்டிருந்தவனான மாறன் என மூன்று இளைஞர்களின் வாழ்க்கையிலும் நடக்கும் எதிர்பாராச் சம்பவங்கள், ஒரு புள்ளியில் அவர்களை நெருக்குகிறது. அப்புள்ளியில் இணையும் அவர்கள், தங்களை நெருக்கும் நபர்களிடம் இருந்து எப்படித் திரும்பி நின்று எதிர்க்கின்றனர் என்பதே படத்தின் கதை. மூன்று இளைஞர்களையும் ஒரு ஜாதிக் கட்சி மீட்டிங் இணைக்கிறது. அதற்கு முன்பே, மூவருக்கும் பொதுவான ஒரு நலம்விரும்பியாக ஃபார்மசி வைத்திருக்கும் கணேசன் உள்ளார். […]

15/06/2018 Dinesh R
நெஞ்சை நிமர்த்தாத சமுத்திரக்கனி – கோலி சோடா 2 சினிமா

நெஞ்சை நிமர்த்தாத சமுத்திரக்கனி – கோலி சோடா 2

“விஜய் மில்டன் என்னை நடிக்கக் கூப்பிட்டார், யாரெல்லாம் நடிக்கிறாங்கன்னு கேட்டேன். சமுத்திரக்கனி மட்டும் தான் நடிக்கிறார், மத்தவங்க எல்லாரும் புதுமுகம் என்றார். யாருக்கும் யோசிக்காமல் உதவிகளைச் செய்பவர் சமுத்திரக்கனி. அவர் எனக்கும் பல உதவிகளைச் செய்திருக்கிறார். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் பல இளைஞர்களுடன் வேலை செய்தது நல்ல அனுபவம்” என்றார் கௌதம் வாசுதேவ் மேனன். கோலி சோடா மாதிரி இது இல்லைனு மக்கள் சொல்லிட கூடாதுனு நினைச்சி தான் இந்த படத்தை எடுத்திருக்கோம். […]

11/06/2018 Dinesh R
மதுரவீரன் விமர்சனம் சினிமா

மதுரவீரன் விமர்சனம்

தனது தந்தை ரத்தினவேலுவைக் கொன்றது யாரென அறியவும், அவர் நடத்தி வந்த ஜல்லிக்கட்டை ஊரில் தொடர்ந்து நடத்திடவும் மலேஷியாவில் இருந்து சொந்த ஊருக்கு வருகிறான் துரை. அவனது இந்த இரு நோக்கங்களும் நிறைவேறியதா என்பதுதான் படத்தின் கதை. மதுரவீரன் எனத் தலைப்பு வைத்திருந்தாலும், சண்முகப்பாண்டியனின் அறிமுகம் ஆர்ப்பாட்டமாய் இல்லாமல் கதையின் போக்கிற்குச் சாதாரணமாய் அமைத்திருப்பது ஆசுவாசத்தைத் தருகிறது. துரையாகச் சண்முகப்பாண்டியன் அடக்கியே வாசித்துள்ளார். ‘பூ’ படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய P.G.முத்தையா, இப்படத்தை இயக்கி ஒளிப்பதிவும் செய்துள்ளார். எடுத்துக் […]

03/02/2018 Dinesh R
ஏமாலி விமர்சனம் சினிமா

ஏமாலி விமர்சனம்

மாலீஸ்வரனுக்கு ரித்து பிரேக்-அப் சொல்லிவிடுகிறாள். தன்னை ஏமாளியாக உணரும் மாலி, அவரது நண்பர் அரவிந்துடன் இணைந்து ரித்துவைக் கொல்லத் திட்டமிடுகிறார். அந்த ஆப்ரேஷனின் பெயர் A.Maali (ஏமாலி), அதாவது A for அரவிந்தன் & Maali for மாலீஸ்வரன். அந்த ஆப்ரேஷனின் முடிவு என்ன என்பது தான் படத்தின் கதை. மாலியாக சாம் ஜோன்ஸும், அரவிந்தாக கொலைக்கான திட்டமிடலைப் போலீஸின் விசாரணைக் கோணத்தில் இருந்து தொடங்குகின்றனர். எனவே திரைக்கதை நான்-லீனியராக, உண்மை – கற்பனை என இரண்டு […]

03/02/2018 Dinesh R
சமுத்திரக்கனி – ஓர் ஆண்தேவதை சினிமா

சமுத்திரக்கனி – ஓர் ஆண்தேவதை

ஆண் தேவதையாக நடிக்கிறார் சமுத்திரக்கனி. பெண்தானே தேவதை? இது என்ன ‘ஆண் தேவதை’ எனத் தலைப்பின் மூலமாகவே யோசிக்க வைக்கின்றனர். இப்படத்தை தாமிரா இயக்குகிறார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மாணவரான இவர், ஏற்கெனவே பாலசந்தர்– பாரதிராஜா இருவரையும் ‘ரெட்டச்சுழி’ படத்தில் இணைந்து நடிக்க வைத்தவர். இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் நடக்கும் கதை. இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடுகிற சட்டை முதல் பேசும் அலைபேசியின் நெட்வொர்க் வரை எதையும் அதுவே […]

16/09/2016 Dinesh R
அப்பா விமர்சனம் சினிமா

அப்பா விமர்சனம்

அரசுப் பள்ளிகளின் மீது வீசிய சாட்டையை, அதனினும் வலுவாகத் தனியார் பள்ளிகளின் மீது வீசியுள்ளார் தயாளன். ஒரு லட்சிய தந்தைக்கு எடுத்துக்காட்டாக தயாளன் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் படத்தைத் தயாரித்து இயக்கியுள்ள சமுத்திரக்கனி. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்தும், ‘நாம் இணைந்து நம் மகனை உயர்த்துவோம்’ எனக் குழந்தையின் தொப்புள் கொடி மேல் எல்லாம் சபதம் எடுத்தும் கிலியைக் கிளப்புகிறார். பார்வையாளர்களுக்குப் பாடமெடுத்துப் புத்தி புகட்டுவது, நன்னெறியை எடுத்தியம்புவது என்ற அவரது அக்கறை […]

01/07/2016 Dinesh R
அம்மா கணக்கு விமர்சனம் சினிமா

அம்மா கணக்கு விமர்சனம்

பரீட்சை என்ற முறையைக் கண்டுபிடித்தவரைக் கூட மாணவர்கள் மன்னித்து விடுவார்கள். ஆனால், கணக்கைக் கண்டுபிடித்தவன் மீது மட்டும் ஏராளாமான மாணவர்கள் கடுங்கோபத்தில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்; இருப்பார்கள். ’எவன்டா கணக்கைக் கண்டுபிடிச்சான்?’ என்ற வசனத்தை எரிச்சலான தொனியில் செவி மடுக்காத மாணவர்களோ, பெற்றோர்களோ அனேகமாக இருக்க மாட்டார்கள். ஏன் மகாகவியையே, ‘கணக்கு, பிணக்கு, ஆமணக்கு’ என விழி பிதுங்கச் செய்த பெருமை கணக்கிற்கு உண்டு. இப்படத்தில் வரும் அம்மாவிற்கும், மகளிற்கும் கூட அதே பிரச்சனைதான். முள்ளை முள்ளால் எடுப்பது […]

25/06/2016 Dinesh R