32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

சமுத்திரக்கனி

50 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
கார்மேனி செல்வம் விமர்சனம் | Carmeni Selvam review சினிமா முக்கியச் செய்தி
04/04/2026 Dinesh R 2 நிமிட வாசிப்பு

கார்மேனி செல்வம் விமர்சனம் | Carmeni Selvam review

ஒரு பணக்காருக்குக் கார் ஓட்டுநராகப் பணி புரியும் செல்வம், அவரது வாழ்வில் எதிர்கொள்ளும் எதிர்பாரா நெருக்கடியும், அதைச் சமாளிக்க அவர் தேர்ந்தெடுக்கும் பாதையும், அப்பாதையில் எழும் விளைவுகளே இப்படத்தின் மையச்சரடு. பணக்கார முதலாளி சம்பத்தாக வரும் கெளதம் வாசுதேவ் மேனன், அப்பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரது மனைவி தேவியாக நடித்துள்ள அபிநயா மிகச் சில காட்சிகள் வந்தாலும், படத்தில் அவரது பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளார். இந்தப் படத்தில் வரும் செல்வம் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவன். அதனால்தான் சம்பத் போலும், […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
கார்மேனி செல்வம் – ஆணின் வலியைப் பேசும் படம் சினிமா

கார்மேனி செல்வம் – ஆணின் வலியைப் பேசும் படம்

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ராமானுஜம், “பாடலில் ஏ ஐ (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அனைத்து இசைகளும் நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கிறது. பாடல்களை கொச்சி, ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அங்குள்ள பிரபலமான இசைக்கலைஞர்களுடன் […]

27/03/2026 Dinesh R
“தடயம்: இன்னும் பல தூரம் அழைத்துச் செல்லும்” – சமுத்திரக்கனி OTT

“தடயம்: இன்னும் பல தூரம் அழைத்துச் செல்லும்” – சமுத்திரக்கனி

ஜீ5 -இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தடயம் இணைய தொடர் வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மைச் சம்பவங்களின் பின்னணியுடன், பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்தத் தொடர், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இவ்வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வினில், ஜீ5 சார்பில் பேசிய கௌஷிக் நரசிம்மன், “பொதுவாக ஒரு […]

09/03/2026 Dinesh R
தடயம் விமர்சனம் | Zee 5 OTT

தடயம் விமர்சனம் | Zee 5

சமுத்திரக்கனி நடித்திருக்கும் முதல் இணையதொடராகும். ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஈச்சம்பள்ளம் எனும் தமிழக – ஆந்திர எல்லைப் பகுதிதான் தொடரின் களம். அதிகாரம் எளியவனை எப்படிக் காயப்படுத்துகிறது, காயப்பட்டவன் சமூகத்தில் என்னவாகிறான் என்பதைத் தொடர் அழுத்தமாகப் பதிந்துள்ளது. விருப்ப ஓய்வு பெறத் துடிக்கும் திறமையான காவல்துறை அதிகாரியான சமுத்திரக்கனியை, மரியாதையுடன் நடத்தி, தொடர் கொலைகளை விசாரிக்கும் வழக்கில் குழுவில் சேர்க்கிறார் ஷிவதா. கொலைகாரர்கள் இருவர் எனத் தடயத்தைக் கொண்டு கண்டுபிடிக்கிறார் சமுத்திரக்கனி. மேலும், […]

24/02/2026 Dinesh R
வீரவணக்கம் விமர்சனம் | Veeravanakkam review இது புதிது

வீரவணக்கம் விமர்சனம் | Veeravanakkam review

“வசந்தத்திண்டே கனல் வழிகளில்” என்று மலையாளத்தில், 2014 ஆம் ஆண்டு வந்த படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வீர வணக்கமாக வெளியிட்டுள்ளனர். நீதி மறுக்கப்பட்டவனுக்கு இரக்கம் காட்டுபவன்தான் உண்மையான கம்யூனிஸ்ட் – P.கிருஷ்ண பிள்ளை கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான P.கிருஷ்ண பிள்ளையின் (1906 – 1948) சரிதத்தை ஒட்டி, இப்படம் இயற்றப்பட்டுள்ளது. E.M.S.நம்பூதிரிபாட், A.K.கோபாலன் ஆகியோரும் P.கிருஷ்ண பிள்ளை தொடங்கும் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்குகின்றனர். இப்படம் நிகழும் காலகட்டம் 1940 […]

29/08/2025 Dinesh R
“இந்த நூற்றாண்டின் சிறந்த படம்” – சமுத்திரக்கனி | Tourist Family சினிமா

“இந்த நூற்றாண்டின் சிறந்த படம்” – சமுத்திரக்கனி | Tourist Family

நடிகர் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினருடன், திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வெகு கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவினில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள், படம் பார்த்த மகிழ்ச்சியில் படம் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் பேசிய லப்பர் […]

28/04/2025 Dinesh R
வீரவணக்கம் | தமிழக – கேரளத்தின் சகோதரத்துவத்தைச் சொல்லும் படம் சினிமா

வீரவணக்கம் | தமிழக – கேரளத்தின் சகோதரத்துவத்தைச் சொல்லும் படம்

பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனியும் பரத்தும் முதல் முறையாக இணையும் தமிழ்நாடு – கேரளாவின் சகோதரத்துவத்தையும், இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் ‘வீரவணக்கம்’ ஆகும். பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள வீரவணக்கத்தில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ சுரேஷ், ஆதர்ஷ், அய்ஸ்விகா, சித்தாங்கனா மற்றும் 2000 க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். பிரபல புரட்சிப் பாடகியும் […]

26/02/2025 Dinesh R
ராமம் ராகவம் விமர்சனம் இது புதிது

ராமம் ராகவம் விமர்சனம்

ராமாயணத்தில், தசரதனின் ஆக்ஞையை ஏற்று வனவாசம் சென்றார் ராகவன். இப்படத்தில், ராகவனுக்காக அசாத்தியமான ஒரு பயணத்தை மேற்கொள்கிறார் தசரதன். தசரத ராமன் எனும் நேர்மையான அரசு அதிகாரிக்கு, ராகவன் எனும் சூதாடி மகன். மகனை உயிருக்கு உயிராக நேசிக்கும் தந்தைக்கும், அப்பாவை உள்ளூற மிகவும் வெறுக்கும் மகனுக்கும் இடையேயான சிக்கலான உறவை மையப்படுத்திய கதைக்கருவைக் கொண்டுள்ளது ராமம் ராகவம் படம். இப்படத்தின் கதை, ‘விமானம்’ படத்தின் இயக்குநர் சிவபிரசாத் யானாலா-வுடையதாகும். தனராஜ் கொரனானியின் முதற்படம் எனச் சொல்ல […]

20/02/2025 Dinesh R
ராமம் ராகவம் – மகனுக்காகத் தந்தை மேற்கொள்ளும் பயணம் இது புதிது

ராமம் ராகவம் – மகனுக்காகத் தந்தை மேற்கொள்ளும் பயணம்

ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’ ஆகும். இப்படத்தை GRR மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். ஓர் (அ)சாதாரண தந்தையைப் பற்றிய படமிது. ஃபிப்ரவரி 21 அன்று வெளியாகும் இப்படத்தின் முன்வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது. அறிமுக இயக்குநர் தனராஜ், “கனி அண்ணாக்கு ரொம்ப நன்றி. எதற்கு நன்றி என்றால், என் முதற்படத்துக்கு தோள் மீது கை போட்டு உதவியதற்கு. அந்தக் […]

19/02/2025 Dinesh R
கேம் சேஞ்சர் விமர்சனம் இது புதிது

கேம் சேஞ்சர் விமர்சனம்

ஊழலுக்கு எதிரான நாயகன் எனும் ஷங்கரின் பழைய விளையாட்டில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அடித்து ஆடியுள்ளார் ராம் சரண். கெட்டதைக் கண்டால் கோபத்தில் பொங்கி எழும் ராம் நந்தனின் சீற்றத்தை ஆரோக்கியமான முறையில் மடைமாற்றி சமூகத்துக்கு நல்லது செய்யச் சொல்கிறாள் அவனது காதலி தீபிகா. படித்து ஐ.பி.எஸ். ஆகி, தொடர் முயற்சியில் ஐ.ஏ.எஸ். ஆகி கலெக்டராகி விடுகிறார் ராம். இறப்பதற்கு முன், ராம் நந்தனை அரசியல் வாரிசாக அறிவிக்கிறார் ஆந்திர முதல்வர் பொப்பிலி சத்யமூர்த்தி. முதல்வர் கனவில் […]

10/01/2025 Dinesh R
வணங்கான் விமர்சனம் இது புதிது

வணங்கான் விமர்சனம்

ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு கதையின் பெயர் வணங்கான் ஆகும். படத்திற்கும் அக்கதைக்கும் சம்பந்தமில்லை. தலைப்பை மட்டும் பயன்படுத்திக் கொள்ள ஜெயமோகனிடம் அனுமதி கேட்டுள்ளார் இயக்குநர் பாலா. காது கேளாத, வாய் பேச முடியாத நாயகன், எவர்க்கும் எதற்கும் வளைந்து கொடுக்காத, வணங்காத அப்பழுக்கற்ற நல்ல முரடன் என்பதால், வணங்கான் எனும் தலைப்பு படத்திற்குச் சாலப் பொருந்துகிறது. சுனாமியால் பெற்றோரை இழந்தவர்கள் கோட்டியும், அவனது தங்கை தேவியும். முரடனான கோட்டிக்கு, ஒரு காப்பகத்தில் வேலை […]

10/01/2025 Dinesh R
ராஜா கிளி விமர்சனம் இது புதிது

ராஜா கிளி விமர்சனம்

கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார் தம்பி ராமையா. அவரது மகன் உமாபதி இப்படத்தை இயக்கியுள்ளார். முருகப்பா சென்றாயர் எனும் கோடீஸ்வரத் தொழிலதிபரின் வாழ்வையும் உயர்வையும் வீழ்ச்சியையும் பற்றிப் பேசுகிறது படம். தெய்வானை எனும் மனைவி இருக்க, வள்ளிமலரை இரண்டாவது திருமணம் புரிந்து கொள்கிறார். பிறகு, விஷாகா என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொள்ள விழைகிறார். விஷாகாவின் கணவன் இறந்துவிட, கொலைப்பழி வந்து சேர, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுபவரின் வாழ்க்கை என்னானது என்பதே படத்தின் முடிவு. […]

27/12/2024 Dinesh R
நந்தன் விமர்சனம் இது புதிது

நந்தன் விமர்சனம்

ஆண்டை கோப்புலிங்கத்திற்குப் பரம விசுவாசியாக உள்ளார் கூழ்பானை என்றழைக்கப்படும் அம்பேத்குமார். ஆதலால், தனித்தொகுதியாக்கப்படும் வணங்கான்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குக் கூழ்பானையைத் தேர்வு செய்கிறார். தான் ஆட்டுவிக்கும் பாவையாகக் கூழ் பானை இருப்பான் என்ற நம்பிக்கை சிதையும் வண்ணம், தங்களுக்கென ஒரு தனிச் சுடுகாட்டைத் தன்னிச்சையாக அரசாங்கத்திடம் கேட்டுப் பெறுகிறார் அம்பேத்குமார். அதனால் கோபமுறும் கோப்புலிங்கத்தின் எதிர்வினையும், அதை அம்பேத்குமார் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும்தான் படத்தின் முடிவு. தனித் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சி மன்ற தலைவர்களை, சமூகத்தில் […]

19/09/2024 Dinesh R
அந்தகன் விமர்சனம் இது புதிது

அந்தகன் விமர்சனம்

அந்தகன் என்றால் பார்வையற்றவன் என்ற பொருள். ‘அந்தாதுன்’ எனும் ஹிந்திப்படத்தின் உரிமையை வாங்கி மறு உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் தியாகராஜன். பார்வையற்றவரான க்ரிஷ், பியானோ இசைக்கலைஞராக ஜூலியின் ரெஸ்டோபாரில் பணியில் சேருகிறார். அவரைத் தனது கல்யாண நாளன்று, தன் வீட்டில் வந்து வாசிக்கும்படி நடிகர் கார்த்திக் கேட்டுக் கொள்கிறார். க்ரிஷ், நடிகர் கார்த்திக்கின் வீட்டிற்குச் செல்ல, அங்கே கார்த்திக்கின்மனைவி சிமியால் கார்த்திக் கொல்லப்பட்டு இறந்துகிடக்கிறார். பார்வையற்றவர் என்ற போதும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததால் பிரச்சனையில் […]

09/08/2024 Dinesh R
“தமிழிற்கு எஸ்; தெலுங்கிற்கு நோ” – சமுத்திரக்கனி | அந்தகன் இது புதிது

“தமிழிற்கு எஸ்; தெலுங்கிற்கு நோ” – சமுத்திரக்கனி | அந்தகன்

‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, “சசியை பல இடங்களில் நண்பன் பிரஷாந்த் நினைவுப்படுத்தினார். ஒரு முறை சசிக்குமார் கையில் வாட்ச் ஒன்றை அணிந்திருந்தார். அதனை உற்று நோக்கிக் கொண்டே இருந்தேன். மாலையில் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன், ‘வா’ என்று அழைத்துக் கொண்டு ஒரு கடிகார கடைக்கு அழைத்துச் சென்றான். அங்கு என்னிடம், ‘நீ என் வாட்ச்சைப் பார்த்தாய் […]

05/08/2024 Dinesh R