32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

சமுத்திரக்கனி

50 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 4 / 4
செய்திகள் வரிசை (பக்கம் 4)
‘ஒழுக்கம் முக்கியம் மகனே!’ – சமுத்திரக்கனி சினிமா

‘ஒழுக்கம் முக்கியம் மகனே!’ – சமுத்திரக்கனி

தன் இஷ்டம் போல் வாழ நினைக்கும் 12 வயது சிறுவனுக்கும், பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டுமென நினைக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமும் இதனால் ஏற்படும் விளைவுகளும்தான் “கொளஞ்சி” படத்தின் கதை. சிம்புதேவன், நவீன் ஆகியோர்களிடம் பணியாற்றிய தனராம் சரவணன் “கொளஞ்சி” படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். ஒய்ட் ஷடோஸ் புரோடக்ஷன்ஸ் சார்பாக நவீன் “கொளஞ்சி” படத்தைத் தயாரிக்கின்றார். இவர் மூடர்கூடம் என்ற படத்தைத் தயாரித்து இயக்கிப் பலரின் பாராட்டைப் பெற்றவர். சமுத்திரக்கனி, சங்கவி ஆகியோர் […]

04/06/2016 Dinesh R
விசாரணை விமர்சனம் சினிமா

விசாரணை விமர்சனம்

ஒரே ஓர் அட்டகாசமான கதை போதும் – நீங்களும் பயங்கரவாதி தான். கதை கூட வேண்டாம். அதிகார வர்க்கம் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியெனச் சுலபமாக அடையாளப்படுத்தும். அப்படி அதிகார வர்க்கத்தால் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படும் வீடற்ற பிளாட்ஃபாரவாசிகள் (பூங்காவாசிகள்) நால்வர் பற்றிய படமிது. நிரபராதிகளான அந்நால்வரும் முதலில் ஆந்திரக் காவல்துறையினரிடம், பின் தமிழகக் காவல்துறையினரிடம் சிக்கிப் சின்னாபின்னமாகின்றனர். அதிகாரம் – ஜாதி, இன, மத, மொழி, “வர்க்கம்” என எந்த வேற்றுமையும் பாவிக்காது. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எந்த […]

07/02/2016 Dinesh R
தற்காப்பு விமர்சனம் சினிமா

தற்காப்பு விமர்சனம்

வேட்டையாடும் அதிகாரம் பெற்றவர்களே வேட்டையாடப்படுகிறார்கள். யாரால் ஏன் என்பது தான் படத்தின் கதை. போலிஸ் செய்யும் என்கவுன்ட்டர்களை அதீத ஹீரோயிஸமாகச் சித்தரிக்கும் படங்களுக்கு இடையில், அதற்கெதிரான வலுவான குரலைப் பதிந்துள்ளது படம். படத்தின் தலைப்பும் காரணப் பெயர்தான். மனித உரிமை ஆணையத்தின் உயரதிகாரியாக வரும் சமுத்திரக்கனியின் வரவுக்குப் பின் படம் சூடு பிடிக்கத் தொடங்குகிறது. முதல் பாதி படத்தின் நான்-லீனியர் படத்தொகுப்பு, நாயகன் சக்தியின் குணவார்ப்பைப் பற்றிய குழப்பத்தையும், படத்தின் போக்கு பற்றிய கேள்வியையும் அளிக்கிறது. இரண்டாம் […]

01/01/2016 Dinesh R
பாயும் புலி விமர்சனம் சினிமா

பாயும் புலி விமர்சனம்

காவல்துறை அதிகாரி ஒருவர், எப்படியெல்லாம் பாய்ந்து தன் கடமையைச் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. அசிஸ்டெண்ட் கமிஷ்ணர் ஜெயசீலனாக விஷால். ஒரு எஸ்.ஐ.-இடம் தனது செயலுக்கான நியாயத்தை மிகவும் பொறுமையுடன் விளக்கும் நல்லவர். என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். படத்திலுள்ள அனைத்து வில்லன்களும் எத்தனை பேரைக் கொல்கிறார்களோ, அதை விட அதிகமான நபர்களை இவர் கொல்கிறார். சாரி, என்கவுண்ட்டர் செய்கிறார். இந்தப் படத்திற்கு ‘காவல் கோட்டம்’ என பெயர் வைக்கத் திட்டமிட்டு இருந்தனராம். சாலையைக் கடக்கப் பயப்படும் செளம்யாவாக காஜல் […]

06/09/2015 Dinesh R
அதிபர் விமர்சனம் சினிமா

அதிபர் விமர்சனம்

அதிபர் எனும் தலைப்பு தொழிலதிபரைக் குறிக்கிறது. 2002 இல் இருந்து 2008க்குள் நடந்த உண்மைக் கதையின் அடிப்படையில் மசாலா அலங்காரம் பூசி எடுக்கப்பட்ட படம். குறிப்பாக தயாரிப்பாளர் சிவகுமாரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. கனடாவில் இருந்து தொழில் புரிய வரும் ஜீவன், ‘மாடர்ன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்குகிறார். அவர் மிகவும் நம்பும் ஒருவராலேயே, நிறுவனத்துக்குள் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. படத்தில் நட்சத்திரப் […]

29/08/2015 Dinesh R