
வட்டம் – ஆண் பெண் உறவிற்கு இடையே!
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குநர் கமலகண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையின் வித்தியாசமான தருணங்களை அழகான டிரமாவாக படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக, உலகளாவிய அளவில் ப்ரீமியர் ஆகிறது. இதனை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.
தயாரிப்பாளர் SR பிரபு, “கமலக்கண்ணன் இயக்கிய மதுபான கடை திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் அவரிடம் கதை கேட்டு படம் எடுக்க முடிவு செய்தோம். இது ஒரு மெயின் ஸ்ட்ரீம் படம். சமூகத்தில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஒரு குற்ற உணர்வு இருக்கும். அதை இந்தப் படம் பேசும். நடிகர் சிபி தான் இந்தக் கதையை எடுத்துச் செல்லச் சரியாக இருப்பார் என நினைத்து இந்தப் படத்திற்குள் அவரைக் கொண்டு வர நினைத...

