Shadow

Tag: சுராஜ் வெஞ்சாரமூடு

யூத் விமர்சனம் | Youth review

யூத் விமர்சனம் | Youth review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பள்ளியில், மூன்று பெண்களைக் காதலித்த பின், காதல் என்றால் என்னவென்று புரிதல் பிரவீனுக்கு ஏற்படுவதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தை அனைத்துப் பேற்றோர்களுக்கும் அர்ப்பணித்துள்ளார் இயக்குநர் கென். அறிமுக இயக்குநராகக் கென், தனது படைப்புத் திறனை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் பறைசாற்றியுள்ளார். ஃப்ரேம்க்கு ஃப்ரேம் கொண்டாடும் வகையில் இளமைத் துள்ளலுடன் ரசிக்க வைக்கிறது. அதற்கு உற்ற துணையாகத் தனது இசையின் மூலம் சகாயம் செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார். ஒளிப்பதிவாளர் விக்கி கதாபாத்திரங்களின் சின்னச் சின்ன பாவனைகளையும் அழகாகப் படம்பிடித்துள்ளார். அதை மிகவும் ரசிக்கத்தக்க வகையில் படத்தொகுப்பாளர் காட்சிகளாகக் கோர்த்து அசத்தியுள்ளார். கதாபாத்திரத் தேர்வுகளிலேயே மேக்ஸிமம் ஸ்கோர் செய்துவிடுகிறார் இயக்குநர் கென் கருணாஸ். நாயகனின் பெற்றோராக நடித்துள்ள சுராஜ் வெஞ்சுரமூடு – தேவதர்ஷினி இணை படத்தின் மிகப் பெரு...
டெக்ஸ்லா – பிரம்மாண்ட தொடக்கம்

டெக்ஸ்லா – பிரம்மாண்ட தொடக்கம்

சினிமா, திரைச் செய்தி
கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் - சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் வரவுள்ள 'டெக்ஸ்லா' திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தில், ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்தத் திரைப்படத்தைக் கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ காணொளி வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் அதிகாரப்பூர்வமான தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான திரு. சீமான், திருமதி லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இயக்குநர் பாலா, இசையமைப்பாளர் அனிருத்,...
வீர தீர சூரன் – பாகம் 2 | Veera Dheera Sooran review

வீர தீர சூரன் – பாகம் 2 | Veera Dheera Sooran review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காவல்துறை உயரதிகாரியான எஸ்.பி. அருணகிரி, கண்ணனையும் அவரது தந்தையான பெரியவர் ரவியையும் என்கவுன்ட்டரில் கொல்ல நினைக்கிறார். இதையறியும் பெரியவர் ரவி, தன் மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென நினைக்கிறார். அதற்காக எஸ்.பி.யைக் கொல்ல, மளிகைக் கடை வைத்திருக்கும் காளியை அணுகுகிறார். யார் யாரைக் கொன்றார்கள் என்பதே படத்தின் கதை. படத்தின் முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் சென்றுவிடுகிறார் இயக்குநர் S.U.அருண் குமார். தன் கணவன் ஃபோன் எடுக்காததால் பதற்றமடையும் ஒரு மனைவியின் கோபம், ஒரு நாள் இரவுக்குள் என்னென்ன களேபரங்களுக்குக் காரணமாகிறது எனும் கதையின் மையக்கருவே திடுக்கிட வைக்கிறது. மனித மனங்களின் சிடுக்குகளையும், அகங்காரத்தையும், பழிவாங்கும் எண்ணத்தையும் நேர்த்தியாகத் திரைக்கதையில் கையாண்டுள்ளார் S.U.அருண் குமார். தனது வேலைக்கு உலை வைத்தவர்களைக் கொன்றே ஆகவேண்டுமென எஸ்.பி. அருணகிரியின் அதீத செயற்பாடுகள், அதி...
தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு சீயான் 62ல் இணைகிறார்

தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு சீயான் 62ல் இணைகிறார்

சினிமா, திரைச் செய்தி
மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, 'சீயான் 62' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.'சீயான்' விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் 'சீயான் 62' எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார்.மேலும் இவரின் நடிப்பில் வெளியான 'ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்', 'டிரைவிங் லைசன்ஸ்', 'ஜன கன மன', 'த கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய படங்களிலும் இவரது தனித்துவமான நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் முதன்முறையாக தமிழில் 'சீயான் 62' படத்தில் நடிக்கிறார். இந்த த...