Shadow

Tag: சூரி

வேதாளம் விமர்சனம்

வேதாளம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீண்டுமொரு 'தல' தீபாவளி. தன் தங்கைக்காகவே வாழும் பாசக்கார அண்ணன் கணேஷ். யாரிந்த கணேஷ், தன் தங்கைக்காக என்ன என்னெவெல்லாம் செய்கிறான் என்பதே படத்தின் கதை. வீரம் போலில்லாமல், இயக்குநர் சிவா கதைக்குக் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார். எனினும் முதல் பாதியின் அசுவாரசியம் முகத்தில் அடிக்கிறது. கதைக்குக் கிஞ்சித்தும் உதவாத நகைச்சுவைக் காட்சிகள், 'உனக்கு குழந்தைச் சிரிப்பு' என்ற தொடர் முகஸ்துதிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. அண்ணன் – தம்பி பாசத்தை ரசிக்கும்படியாகச் சொல்லிய சிவா, அண்ணன் – தங்கை பாசத்தை ரசிக்கும்படி சொல்லத் தவற விட்டுவிட்டார். ‘என்னடா இது?’ என்று யோசனையில் இருக்கும்போதே, வான வேடிக்கையுடன் ‘தீபாவளிக் கொண்டாட்டம்’ படத்தின் இரண்டாம் பாதியில் தொடங்குகிறது. அஜித் குமாரின் வில்லத்தனம் அட்டகாசமாய் மிளிர்கிறது. அவர் வில்லன்களைப் பார்த்துப் பழிப்பு செய்யும் விதமாய்ச் சிரிப்பதும், சிரித்துக் கொ...
பாயும் புலி விமர்சனம்

பாயும் புலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காவல்துறை அதிகாரி ஒருவர், எப்படியெல்லாம் பாய்ந்து தன் கடமையைச் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. அசிஸ்டெண்ட் கமிஷ்ணர் ஜெயசீலனாக விஷால். ஒரு எஸ்.ஐ.-இடம் தனது செயலுக்கான நியாயத்தை மிகவும் பொறுமையுடன் விளக்கும் நல்லவர். என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். படத்திலுள்ள அனைத்து வில்லன்களும் எத்தனை பேரைக் கொல்கிறார்களோ, அதை விட அதிகமான நபர்களை இவர் கொல்கிறார். சாரி, என்கவுண்ட்டர் செய்கிறார். இந்தப் படத்திற்கு ‘காவல் கோட்டம்’ என பெயர் வைக்கத் திட்டமிட்டு இருந்தனராம். சாலையைக் கடக்கப் பயப்படும் செளம்யாவாக காஜல் அகர்வால். ‘நான் மகான் அல்ல’ படத்தில் கவர்ந்தது போல் கவரவில்லை. படத்தின் முதல் பாதியைக் காப்பாற்றுவது, படத்தோடு சம்பந்தமில்லாத காமெடி ட்ராக்கில் வரும், மனைவிக்குப் பயந்த கான்ஸ்டபிள் சூரிதான். இரண்டாம் பாதியைச் சுவாரசியப்படுத்துகிறார் தொழிலதிபர் செல்வமாக வரும் சமுத்திரக்கனி. தமிழ் சினிமாவின் தவிர்...
ஜீவா விமர்சனம்

ஜீவா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீண்டுமொரு பள்ளிப் பருவக் காதலையும், தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம்பெறும் சாதி அரசியலையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். ஜீவாவாக விஷ்ணு விஷால். மீசை தாடியை நன்றாக ஷேவ் செய்துவிட்டு, பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவராக திரையில் அறிமுகமாகிறார். என்னடா இது சோதனை என்றிருந்தாலும் திரைக்கதை ஓட்டத்தில் அந்த எண்ணம் மெல்ல மறையத் தொடங்குகிறது. கல்லூரிக்கு வந்து கிரிக்கெட்தான் வாழ்க்கை என ஜீவா முடிவெடுத்து, அரசியலால் காயப்படும் பொழுதெல்லாம் மனதில் அப்பாத்திரமாகவே நிற்கிறார். நான் மகான் அல்ல படத்தில், ‘இறகை போல் அலைகிறேன்’ என்ற பாடலில் செய்த மாயத்தை, இப்படத்தில் ஸ்ரீதிவ்யாவைக் கொண்டு செய்துள்ளார் சுசீந்திரன். பள்ளி மாணவியாக அவர் காட்டும் குறும்புத்தனமான முகபாவங்கள் ரசிக்க வைக்கின்றன. விஷ்ணு பள்ளி மாணவர் என்ற கொடுமையை சகிக்க வைக்க பெரிதும் உதவி செய்பவர் ஸ்ரீதிவ்யாவே! ஆனால் என்ன, நாயகனின் தாய் ...