Shadow

Tag: சூர்யா

சிIII விமர்சனம்

சிIII விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிங்கம் மூன்றாம் பாகத்தின் தலைப்பு செல்லமாகச் சுருங்கி "சி3" ஆகிவிட்டது. ஆந்திரக் கமிஷ்னர் கொல்லப்படுகிறார். புலனாய்வு செய்ய தமிழகத்தில் இருந்து டி.சி.பி. துரைசிங்கம் ஆந்திர அரசால் அழைக்கப்படுகிறார். கமிஷ்னரைக் கொன்றவர்களை நூல் பிடித்துப் போனால், ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பெரும் வில்லன் கிளம்புகிறார். பணம் சம்பாதிக்கும் போதையில் தெரிந்தே தவறு செய்யும் வில்லனை துரைசிங்கம் எப்படி வேட்டையாடுகிறார் என்பதுதான் படத்தின் கதை. அப்படியொரு வேகம் கதையின் நகர்வில். இடையில், சம்பந்தமில்லாமல் சூரி செய்யும் அசட்டுக் காமெடிகளால் நியாயமாகப் பார்வையாளர்கள் கொலைவெறி ஆகவேண்டும். ஆனால், நின்று நிதானித்து மூச்சு விட சூரியே உதவுகிறார். இரண்டாம் பாதிக்கு பின் தான் விட்டல் எனும் வில்லனைச் சேர்ந்தாற்போல் திரையில் 30 நொடிகளுக்கு மேல் பார்க்க முடிகிறது. முதல் பாதியில், எக்சர்சைஸ் செய்கிறார்; தனி விமானம் சள்ளெனத் ...
பசங்க – 2 விமர்சனம்

பசங்க – 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன்னைத் தானே அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தான் பெற்ற குழந்தைகளையும் மன அழுத்தத்திற்குத் தள்ளும் பெற்றோர்களுக்கான படமிது. தங்கள் உலகத்திற்குள் சிறுவர்களை இழுக்க நினைக்கும் பெற்றோர்களிடம், குழந்தைகள் உலகத்தை அறிமுகம் செய்கிறது பசங்க-2. நற்சாந்துபட்டியில், ஒரு விளையாட்டு மைதானத்தில் படம் தொடங்குகிறது. அங்கேயே படம் முடிந்தும் விடுகிறது. அக்காட்சியில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் மூலம் பேசத் தொடங்கும் பாண்டிராஜ், படம் முழுவதும் பெற்றோர்களிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருக்கிறார். சிறுவன் நிஷேஷும், சிறுமி வைஷ்ணவியும் அதகளப்படுத்தியுள்ளனர். கத்தி மேல் நடந்திருக்கும் பாண்டிராஜைப் பத்திரமாக கரை சேர்த்துள்ளனர். இச்சிறுவர்கள் மட்டுமல்ல, மருத்துவர் தமிழ் நாடனாக வரும் சூர்யா, ஆசிரியை வெண்பாவாக வரும் அழகான அமலா பால், கவினின் பெற்றோர்களாக வரும் ராம்தாஸும் வித்யாவும், நயனாவின் பெ...
ஏழாம் அறிவு விமர்சனம்

ஏழாம் அறிவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஏழாம் அறிவு- ஆறு வருடங்களுக்குப் பிறகு தமிழில் படம் இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். கஜினி திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைகிறார்; கமலின் மகள் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார் என்று எதிர்பார்ப்புகளை ஏகத்திற்கு வளர்த்து, கர வருடத்தின் ஐப்பசி 9ஆம் தேதி அன்று வந்த தீபாவளி திருநாளில் வெளியிடப்பட்டது. ஆறாவது அறிவினும் உயர்ந்த அறிவு என தலைப்பைப் பொருள் கொள்ளலாம். தனது குருமாதாவால் பணிக்கப்படும் போதி தர்மர் சைனாவில் பரவும் தொற்று நோயைத் தடுக்க பல்லவ நாட்டின் தலைநகரமான காஞ்சியில் இருந்து புறப்படுகிறார். குருமாதாவின் கட்டளையை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களுக்கு தற்காப்புக் கலையையும் பயிற்றுவித்து, அம்மக்களுக்காகவே இறக்கிறார். 1598 வருடங்களுக்குப் பிறகு அவரது மரபணு அமைப்பை இணையத்தில் காணும் சுபா ஸ்ரீனிவாசன், போதி தர்மரின் வாரிசுகள் எவரேனும் காஞ்சியில் வாழக் கூடும் என த...
ரத்த சரித்திரம் விமர்சனம்

ரத்த சரித்திரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மண்ணில் குருதி படாமல் எந்த சரித்திரமும் முழுமை அடைவதில்லை. எல்லைகளை விரிவுபடுத்துதல், இளைத்தவர்களை ஏய்த்தல், தலைமைப் பதவிக்கு விழைதல், ஆளைத் திணறடிக்கும் அழகியப் பெண்களிடம் மயங்குதல் என ஒவ்வொரு சரித்திரத்திற்குப் பின்னும், தனி மனிதன் ஒருவனின் ஆழ்ந்த அக வேட்கையே அடிநாதமாக இருக்கும். நட்பு, துரோகம், காதல், சூழ்ச்சி போன்ற சகல தந்திரங்களையும் கையாண்டு அவ்வேட்கையை தணித்துக் கொள்ள முயலும் பொழுது அடுத்த தலைமுறையினர்களுக்கு ஒரு படிப்பினையாக சரித்திரம் அங்கே உருவாகிறது. அப்படி ஐந்தாண்டுகளுக்கு (2005) முன் ஆந்திர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஓர் உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு 'ரத்த சரித்திரம்' என்னும் படத்தினை இயக்கியுள்ளார் ராம் கோபால் வர்மா. ஏழைப் பங்காளனான வீரபத்ராவும், அவரது மூத்த மகனும், ஆனந்தபுர மாநில அரசியல் பிரமுகர்களான நாகமணி மற்றும் நரசிம்ம தேவன் ஆகியோரால் கொல்லப்படுகின்றனர்...