
சேவல்களம் – ஒழுக்கத்தைத் தரும் ராஜபோதை
சுபமாய் அல்ல, பரம சுபமாய் முடிகிறது சேவல்களம் நாவல். அந்நிறைவைப் புறந்தள்ளி, மனம் குறையைத் தேடத் துவங்கி விடுகிறது. அகத்தின் நிலைகுலைவு, வாழ்வு தரும் ரணம் என கண் மூடி அனுபவிக்க நாவலில் ஏதுமில்லாமல் போவதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு வெறுப்போ, கசப்போ, வன்முறைச் செய்கையோ மனித மனதிற்குத் தேவைப்படுகிறது. ‘சமூகக் கட்டுப்பாடுகளாலும், நாகரீகத்தினாலும் தற்காத்துக் கொள்ளும் மனித மனம், தனது ஆழ்மன வன்முறை உணர்ச்சிகளுக்கு உபத்திரவம் இல்லாத வடிகால்களைத் தேடிக் கொள்ளும்’ என்கிறது உளவியல். இதையே தான் காலந்தொட்டு செய்தி ஊடகங்கள் செய்து வருகின்றன. இதை, எழுத்தாளர் சுஜாதா தன் பாணியில், “நல்ல செய்தி கொடுத்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். ரேட்டிங் விழுந்துவிடும்” எனச் சொல்லியுள்ளார். அதுவும் இன்றைய நேரடி விவாதக்களக் காலத்தில், மனிதர்கள் மீதான அவநம்பிக்கையைப் பரப்புவது என்பது முற்றிய நிலையில் இருக்கிறது. அதன் வெ...


