Shadow

Tag: ஜி.எம்.சுந்தர்

ரசவாதி விமர்சனம்

ரசவாதி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
குற்றப்பின்னணியுடன் அறிமுகமாகும் ஒரு காவல்துறை அதிகாரி. சித்த மருத்துவம் செய்து கொண்டு, இயற்கை ஆர்வலராக அமைதியான முறையில் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கும் ஒரு சித்த வைத்தியர். இந்த சித்த வைத்தியர் மீதும், அவருக்கு இருக்கும் காதல் மற்றும் காதலி மீதும் இந்தக் காவல்துறை அதிகாரிக்கு தீராத வன்மம். வன்மம் ஏன், வன்மத்தால் விளைந்தது என்ன என்பதே இந்த ரசவாதி திரைப்படத்தின் கதை. மெளனகுரு, மகாமுனி திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சாந்தகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.  சித்தவைத்தியர் சதாசிவ பாண்டியனாக அர்ஜூன் தாஸ் நடித்துள்ளார். ஒரு காலை சற்று தாங்கித் தாங்கி நடந்து கொண்டு, யானை போன்ற வனவிலங்குகளின் காலில் உடைந்த மதுபாட்டில்கள் காயத்தை ஏற்படுத்திவிடும் என்கின்ற அக்கறையுடன் அவற்றை அப்புறப்படுத்தும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். சந்திராவாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷிற்க...
புன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்

புன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்

சினிமா, திரைத் துளி
கதையின் பிரதான பாத்திரம் ஏற்று ஏராளமான வசனங்கள் பேசி நடித்திருக்கும் முன்வரிசை கதாநாயகர்கள் தவிர, அந்த முன்வரிசை முகங்கள் தவிர பிற முகங்கள் மனதில் பதிவதில்லை. அதற்கடுத்த இரண்டாவது வட்டத்தில் இருப்பவர்கள் காலதாமதமாகவே பார்வையாளர் மனதில் பதிவார்கள். மூன்றாவது வட்டத்தில் இருப்பவர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம் பெரும்பாலும் வணிகப் படங்களில் அவர்கள் முகம் நமக்குள் பதிய முகாந்திரம் இல்லாமல் போகிறது. இப்படி மூன்றாவது வட்டத்திலிருந்து இரண்டாவது வட்டத்திற்குப் போராடும் நடிகர்களில் ஒருவர் தான் ஜி.எம்.சுந்தர். இவர் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவர். இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்களால் ' புன்னகை மன்னன்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர். கமலின் 'சத்யா' படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். சத்யராஜ் நடித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு ' படத்திலும் மு...