Shadow

Tag: ஜி.வி.பிரகாஷ் குமார்

“விஸ்வநாத் & சன்ஸ்: ஹாட்ரிக் வெற்றி” – ஜி.வி | The ONE Suriya

“விஸ்வநாத் & சன்ஸ்: ஹாட்ரிக் வெற்றி” – ஜி.வி | The ONE Suriya

சினிமா, திரைச் செய்தி
சித்தாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் 'சூர்யா' நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம், பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்தப் படக்குழுவினர், நன்றி நவில்தல் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், ''சூர்யாவை 2003 ஆம் ஆண்டில் 'கஜினி' படத்திற்காக நேர்காணல் செய்தேன். நேர்காணலுக்காக ஒப்புக்கொண்ட நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாக வந்தா...
விஸ்வநாத் & சன்ஸ் விமர்சனம் | Vishwanath & Sons review

விஸ்வநாத் & சன்ஸ் விமர்சனம் | Vishwanath & Sons review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விஸ்வநாத் எனும் தொழிலதிபர், சான் பிரான்சிஸ்கோ சென்று வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக் கொள்கிறார். திடீரென அக்குழந்தைக்கு மிக அரிதான நோய் ஒன்று வர, அதற்குத் தீர்வாகத் தாயின் எலும்பு மஜ்ஜை வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. விஸ்வநாத், வாடகைத்தாயான மதனகாமேஸ்வரி ஜோதிலிங்கம் எனும் மேடி J-வைக் கண்டுபிடித்து இந்தியா அழைத்து வருகிறார். மேடியின் வரவால், விஸ்வநாத் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதே படத்தின் கதை. கச்சிதமான கதாபாத்திரத் தேர்வுகள் படத்தின் பெரும்பலம். சூர்யா, ராதிகா சரத்குமார், மமிதா பைஜு, ரவீனா டாண்டன், பவானிஸ்ரீ ஆகியோர் தங்கள் ஏற்றப் பாத்திரத்திற்கு மிக நிறைவான பங்களிப்பை அளித்துள்ளனர். அந்த மாளிகையின் உட்புறத்தோற்றமான ஹால் மட்டும் ஓர் அந்நிய உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் நடிகர்கள் அதைத் தங்களது நடிப்பால் மறக்கடித்து விடுகின்றனர். இயல்பாகவே ஓர் அப்பாவித்தனம் அப்பி...
விஸ்வநாத் & சன்ஸ் – ட்ரெய்லர்

விஸ்வநாத் & சன்ஸ் – ட்ரெய்லர்

Trailer, காணொளிகள், சினிமா
சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.  இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூ ர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமையவுள்ளது. நாற்பது வயதைக் கடந்தும் தனது கனவுகளைத் துரத்தும் சர்வதேசத் துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை இந்த ட்ரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஸ்டைல், கனிவு, நகைச்சுவை, உணர்ச்சிகள் ஆகியவற்றை சூர்யா மிகச் சிறப்பாகக் கையாண்டு, பார்வையாளர்களின் மனதை உடனடியாகக் கவரும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். திரையில் மமிதா பைஜு தனது தனித்துவமான வசீகரத்தை வெளிப்படுத்த, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் மற்றும் சிறந்த நட்சத்திர நடிகர்கள் குழு இந்த உணர்...
விஸ்வநாத் & சன்ஸ் – தமிழில் ஓர் அலா வைகுந்தபுரம்லோ

விஸ்வநாத் & சன்ஸ் – தமிழில் ஓர் அலா வைகுந்தபுரம்லோ

சினிமா, திரைச் செய்தி
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் கலையரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் முன்னிலையில் கோலாகலமாக திருவிழா போல் சிறப்பாக நடைபெற்றது. ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்குகிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், ''மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்த வாத்தி படத்திற்குப் பிறகு, மீண்டும் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்சி, சாய் சௌஜன்யாக்கு நன்றி. 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் மிகவும் ஸ்பெஷலானது. சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்திற்குப் பிறகு நானும் அவரும் இணைந்து பணி...
Breakfast விமர்சனம்

Breakfast விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதலித்துக் கல்யாணம் செய்து, மூன்று மாதத்திற்குள் வேகமாகப் பிரிகின்றனர் என்பதை உணர்த்தும் விதமாகத் தலைப்பினை வைத்துள்ளார் இயக்குநர் காந்தி கிருஷ்ணா. இவர், செல்லமே, ஆனந்த தாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர். சங்க காலக் காதல், ஆண்டாள் காலக் காதல், 80களின் காதல் ஆகியவற்றைச் சொல்லிவிட்டு, இந்தக் காலக் காதல் கதைக்குள் வருகிறார். ரிஷபும் லக்‌ஷ்மியும் இணையத்தில் அறிமுகமாகி, வாரயிறுதியில் மலேஷியாவிற்குச் சென்று, காதலாகித் திருமணம் செய்து கொள்கின்றனர். மூன்றாவது மாதத்தில், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கின்றனர். அவரை கங்கா தேவி என்பவரிடம் கவுன்சிலிங்கிற்கு அனுப்பி வைக்கிறது நீதிமன்றம். கங்கா தேவி, சென்சார்க்கு வந்த ஒரு திரைப்படத்தின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார். பிஸ்கட் கம்பெனி முதலாளி மகளான ஜான்வி, குப்பை அள்ளும் பணிபுரியும் பொறியாளரான சாந்தனுவைக் காதலிக்கிறார். அந்தக் காதல் என்னாகிறது எனச் சொல்லி க...
பாரதிராஜாவிற்கு தங்கச்சங்கிலி பரிசளித்த தயாரிப்பாளர்

பாரதிராஜாவிற்கு தங்கச்சங்கிலி பரிசளித்த தயாரிப்பாளர்

சினிமா, திரைச் செய்தி
 தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ‘கள்வன்’. இந்தப் படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டாம் வாரத்திலும் குழந்தைகளுடன் குடும்பமாகப் இந்தப் படத்தைத் திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். இதைக் கொண்டாடும் விதமாக படத்தில் தன்னுடைய தேர்ந்த நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ‘இயக்குநர் இமயம்’, நடிகர் பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு தங்கச்சங்கிலி வழங்கி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.இந்தத் தருணத்தில் கதாநாயகன் ஜிவி பிரகாஷ், மேனேஜர் ஸ்ரீதர், இயக்குநர் ஷங்கர், எடிட...
“பாரதிராஜா அருகில் உட்காரத் தகுதியானவர் வெற்றிமாறன்” – இயக்குநர் லிங்குசாமி

“பாரதிராஜா அருகில் உட்காரத் தகுதியானவர் வெற்றிமாறன்” – இயக்குநர் லிங்குசாமி

சினிமா, திரைச் செய்தி
ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடலாசிரியர் சிநேகன், “ஜிவி சாருடன் சேர்ந்து நிறைய படங்களில் பயணப்பட்டிருக்கிறேன். பாடல்களும் ஹிட் ஆகி இருக்கிறது. இசையமைப்பாளர்களுக்குப் பாடல் எழுதும்போது வரிகளை ரசிக்கும் இசையமைப்பாளர் இருந்தால் எழுதுவதற்கு இன்னும் உற்சாகமாக இருக்கும். அப்படியான ஒருவர்தான் ஜிவி. இந்தப் படத்தின் பாடல்களும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இயக்குநர் ஷங்கர் அவ்வளவு ஒற்றுமையுடன் அணியை எடுத்துச் சென்றார். ஜிவி பிரகாஷ் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் அடுத்தடுத்த உயரத்திற்குச் செல்வார்” என்றார். இசையமைப்பாளர் ரேவா, “ 'கள்வன்' படம் எங்கள் எல்லோருக்குமே ஸ்பெஷல் படம். என்னை நம்பி இசையமைக்க வாய்...