Shadow

Tag: தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு – ஒரு மீள் பார்வை

தமிழ்ப் புத்தாண்டு – ஒரு மீள் பார்வை

கட்டுரை, மற்றவை
பள்ளி நாட்களில் பூமத்திய ரேகை, கடக ரேகை, மகர ரேகை என்றெல்லாம் படித்திருப்போம். இதெல்லாம் புவியியல் அறிஞர்கள் பூமிப் பந்தின் குறுக்கே ஏற்படுத்திய கற்பனைக் கோடுகள். இதில் பூமத்திய ரேகையானது நடுவிலும், இதற்கு மேலும் கீழுமாக  கடக ரேகை, மகர ரேகைகள் ஓடுகின்றன. அதாவது பூமத்திய ரேகையின் வடக்குப் பகுதியில் கடக ரேகையும், புமத்திய ரேகையின் தெற்குப் பகுதியில் மகர ரேகையும் அமைந்திருக்கின்றன. ஆண்டு முழுவதும் சூரியனின் ஒளி கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் விழுகிறதுநமது பூமியானது அதன் அச்சில் இருந்து 23.5 பாகை சாய்வுக் கோணத்தில் சுழன்று கொண்டிருப்பதால் செங்குத்தாய் விழும் சூரியனின் ஓளி பூமியின் மீது நகர்வதாகத் தோன்றுகிறது. இதனால்தான் பருவ கால மாற்றங்கள் எல்லாம் ஏற்படுகின்றன.இதன் அடிப்படையில்தான் மூன்று மாதத்திற்கு ஒரு பருவமாய், நான்கு பருவ காலங்களை மேற்கத்திய அறிவியல் சமூகம் வரையற...