Shadow

Tag: திருவாய்மொழி

திருமழிசை ஆழ்வார் – நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

திருமழிசை ஆழ்வார் – நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

ஆன்‌மிகம், இது புதிது
நீ எனக்குள் தான் இருக்கிறாய் என்று அறிந்த பின், என் மனதுக்குள் என்றும் நீங்காமல் நின்றும் அமர்ந்தும் கிடந்தும் அருளுகின்றாய் முன்பொரு காலத்தில் திருமழிசையில், ஒரு முனிவர் தம்பதிக்குக் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தையின் கைகளும் கால்களும் அசைவற்ற நிலையில் இருந்ததால் அக்குழந்தையை ஒரு பொது இடத்தில் அக்குழந்தையின் பெற்றோர் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். அவ்வழியே வந்த கூடை செய்து விற்றுப் பிழைக்கும் தம்பதி, இந்தக் குழந்தையை ஆசையாக எடுத்தனர். அக்குழந்தையின் கை கால்கள் நன்கு அசைந்தது. இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததால், இக்குழந்தையையே தமது குழந்தையாக எண்ணி வளர்த்து வந்தனர். அடுத்த சில வருடங்களில் கூடை பின்னும் தம்பதிக்குக் குழந்தை பிறந்தது. அவர்களின் குழந்தைக்குக் "கனிக்கண்ணன்" என்று பெயரிட்டு வளர்த்தனர். இவர்களின் வளர்ப்புக் குழந்தை பின்னாளில் ஞானமும் பக்தியும் நிரம்பிய த...
நம்மாழ்வார் – உளனெனில் உளன்

நம்மாழ்வார் – உளனெனில் உளன்

ஆன்‌மிகம்
இறைவன் இருக்கிறான் என்றால் இருக்கிறான். இல்லை என்றால் இல்லை. இருந்தும் இல்லாமலும் பரவியிருக்கும் பரம்பொருளே பெருமான் . பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் மிகவும் சிறப்பு மிக்கவர். அவர், நமக்கான ஆழ்வார் என்பதால் “நம்மாழ்வார் (நம்ம ஆழ்வார்)” என அன்போடு அழைக்கப்படுகிறார். திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள 4000 பாசுரங்களில் அதிக பாசுரங்கள் நம்மாழ்வாருடையது தான். மொத்தம் 1295 பாசுரங்கள் அருளியுள்ளார். திவ்வியப் பிரபந்தப் பாடல்களைத் தொகுத்த நாதமுனிகள், நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பிறர் பாடக் கேட்டுப் பிறகு தான் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுக்க ஆரம்பித்தார். நம்மாழ்வார் இல்லையென்றால் திவ்வியப் பிரபந்தமே இல்லை. பன்னிரண்டு ஆழ்வார்களில் பத்து பேர் திருமாலைப் பற்றி மட்டும் தான் பாடியிருக்கின்றனர். ஆண்டாள், திருமாலையும் பாடி, பிற ஆழ்வார்களின் பெருமையையும் பாடி சிறப்பு சேர்த்தார். ஆனால் மதுரகவியாழ்வார், திரு...