Shadow

Tag: துஷாரா விஜயன்

மகுடம் விமர்சனம் | Magudam review

மகுடம் விமர்சனம் | Magudam review

சினிமா, திரை விமர்சனம்
ஊருக்கு நல்லது செய்யும் ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவ்வொருவரைத் தவறாக நினைத்து ஒதுங்கி வாழும் அவரது மகன்தான் அடுத்து தலைமையேற்று ஊருக்குக் காவலாக இருக்கவேண்டுமென மகுடம் சூட்டுகின்றனர் மக்கள். கிருபாவின் குடும்பத்திற்கு ஒரு கார் வாங்க வேண்டும் என்பது ஆசை. பொருளாதாரச் சூழல் உவப்பாக இல்லாத சூழலிலும், ஒரு பயன்படுத்தப்பட்ட BMW காரை வாங்குகிறார் கிருபா. அந்தக் கார், கிருபா மறக்க விரும்பும் அவரது பால்யத்துடன் மீண்டும் தொடர்பை உருவாக்கிப் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. அவருக்கு ஏற்படும் இழப்பு என்ன, அது அவரை எங்கு இட்டுச் செல்கிறது என்பதே படத்தின் கதை. இந்தப் படத்திற்கு, 185 நிமிடங்கள் கால அளவு என்பது ரொம்பவே அதிகம். படத்தொகுப்பாளர் N.B.ஸ்ரீகாந்த் மிகக் கறாராகப் படத்தின் நீளத்தைக் கட்டுக்குள் வைத்திருந்திருக்கலாம். கிருபாவின் நண்பராக வரும் அர்ஜெய்க்கு ஒரு பில்டப் காட்சி வருகிறது. ஆனால் அதன் ப...
காட்டாளன் விமர்சனம் | Kaattalan review

காட்டாளன் விமர்சனம் | Kaattalan review

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தமிழில், காட்டை ஆள்பவன் என்பது போல் பொருளைத் தந்தாலும், மலையாளத்தில் காட்டாளன் எனும் சொல்லுக்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன. ஒன்று, வேட்டைக்காரன்; இன்னொன்று, காட்டின மக்கள்; மற்றது, காட்டான் ஆகும். காட்டாளனுக்குக் கீழ், 'தி ஹன்டர்' என ஆங்கிலத்தில் வந்தாலும், மூன்று அர்த்தங்களிலும் படத்தைக் கொள்ளலாம். அதில் நாகரிகமற்றவன் என்று பொருளில் வரும் காட்டான் என்ற அர்த்தமே படத்தின் கதைக்கருவிற்குச் சால பொருந்துகிறது. ஆனக்கொல்லி காட்டில், தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடுகின்றான் மாரி. யானைத்தந்தங்களைக் கடத்தும் கடத்தல் குழுமத்தின் (Cartel) தலைவனாகவும் வளர்கிறான். மாரியின் தொழிலைக் கெடுத்துக் கடத்தல் குழுமத்தின் தலைவனாகப் பார்க்கிறான் எடி. எடியின் முயற்சிகள் வெற்றி பெற்று, மாரியின் தந்தங்களை ராமேஸ்வரத்திற்குக் கொண்டு செல்ல விடாமல் செய்துவிடுகிறான். எடியை எதிர்க்க, ஆண்டனி என்பவனை அழைத்து வருகிறான் மாரி....