Shadow

Tag: நாகார்ஜுனா

குபேரா விமர்சனம் | Kuberaa Review

குபேரா விமர்சனம் | Kuberaa Review

சினிமா, திரை விமர்சனம்
திருப்பதியில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் தேவாவின் பெயரில் ஷெல் கம்பெனி தொடங்கப்பட்டுப் பத்தாயிரம் கோடி டெபாசிட் செய்யப்படுகிறது. அப்பணத்தை மீண்டும் அவரிடமிருந்து வில்லன் பெறுவதற்குள், தேவா உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பித்துவிடுகிறார். அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கும் வில்லனிடமிருந்து பத்தாயிரம் கோடிக்குச் சொந்தக்காரரான பிச்சைக்காரன் தேவாவால் தப்பிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.ஒரு பொருளாதாரக் குற்றப் பின்னணியில் தொடங்கும் படம். அக்குற்றத்தைச் சாத்தியமாக்குவதற்கான செயற்முறை, சிறைப்பட்டிருக்கும் சி.பி.ஐ. அதிகாரியில் இருந்து சாலையோரத்தில் இருக்கும் பிச்சைக்காரர்கள் வரை நீள்கிறது. மிக அழகாகப் படத்தின் முதற்பாதியில் இவற்றைக் கட்டமைக்கிறார் சேகர் கம்முலா.பெரும்கோடீஸ்வர வில்லன் நீரஜ் மித்ராவாக ஜிம் சார்ப் நடித்துள்ளார். அவரது பணக்காரத் தோரணையே, பார்வையாளர்களை அசெளகரியம் கொள...
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் விமர்சனம்

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் என்பது திருமாலைப் போற்றும் திருநாமங்களில் ஒன்று. பக்தியைச் சிலாகிக்கும் படமிது. திருப்பதி பெருமாளான பாலாஜிக்கும், அவரது பரம பக்தனான ஹாத்திராம் பாபாக்குமான பிணைப்பே படத்தின் கதை. 'கடவுளைக் காணும் வழி யாது?' என அழகு சிறுவனான ராமன் வினவுவதில் இருந்து படம் தொடங்குகிறது. 'ஓம்' என்ற ராமனின் கடுந்தவம் வைகுண்டத்தை அடைய, பெருமாள் ராமனைக் காண பாலகனாக வருகிறார். சிறுவனைக் கடவுளென உணராமல் துரத்தி விடுகிறார் இளைஞனான ராமன். பின் மீண்டும் எப்படி இறையை உணர்ந்து ஆத்ம பக்தனாகப் பெருமாளுக்கு மிகப் பிரியமானவராகப் பரிணமிக்கிறார் என நெகிழ்ச்சியாகப் பயணிக்கிறது படம். பக்தர் ஹாத்திராமாக நாகார்ஜுனா அசத்தியுள்ளார். அன்னம்மாச்சார்யாவாக முன்பே பக்திப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்த முன் அனுபவம் இதில் அநாயாசமாய் மிளிர்கிறது. பெருமாளுக்கு நித்ய கல்யாண பூஜ்சி செய்வதாகட்டும், அவருடன் பக...