
பத்மாவதியின் காவியமும்; நெருப்பில் வெந்த திரையும்!
பல தடைகளைக் கண்டு எதிர்ப்புகளைச் சம்பாதித்துத் தனக்காகக் காத்திருந்த திரையை அடைந்திருக்கிறாள் பத்மாவதி. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே (பத்மாவதி), ரன்வீர் சிங் (சுல்தான் அலாவுதீன் கில்ஜி), ஷாகித் கபூர் (ராவல் ரத்தன் சிங்) மற்றும் பலர் நடித்துள்ள இந்தி மற்றும் தமிழின் மொழிமாற்று வடிவமான 'பத்மாவதி' 'பத்மாவத்' எனும் பெயரில் வெளியாகியுள்ளது. 'பத்மாவத்' என்று பெயர் மாற்றினால் சிக்கல்கள் சரியாகிவிடுமா என்பதை விமர்சிக்கும் வகையில் கோலிவுட் நடிகர் சித்தார்த், தனது ட்விட்டர் பக்கத்தில் 'கண்ணாடியைத் திருப்பினால் எப்படிப்பா ஆட்டோ ஓடும்?' என்று கேட்டிருந்ததெல்லாம் ஒருபக்கம் இருக்க, 'எப்படி இருக்கிறாள் பத்மாவதி?' என்கிற ஆர்வம் மறுபக்கம் உந்தித் தள்ளுகிறதல்லவா? முதலில் கதை என்ன? எதற்காக இந்தியத் தேசம் முழுக்க இத்தனை சிக்கல்கள் இந்த பத்மாவதியால்? என்கிற கேள்விகளுக்கல்லாம் தக்க பதில்களுடன...

