Shadow

Tag: பிரேம்ஜி அமரன்

வல்லமை விமர்சனம் | Vallamai review

வல்லமை விமர்சனம் | Vallamai review

சினிமா, திரை விமர்சனம்
திறன், பலம், வலிமை, ஆற்றல், சக்தி என தலைப்பைப் பொருள் கொள்ளலாம். விவசாயப் பின்னணியையுடைய சரவணனும், அவரது மகள் பூமிகாவும் கல்விக்காகச் சென்னைக்கு வருகிறார்கள். எவரோ சிறுமி பூமிகாவை மயக்கமடையச் செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிடுகின்றனர். அது யாரெனக் கண்டுபிடித்து, தான் அனுபவிக்கும் வலிக்குப் பழி வாங்கவேண்டுமென விரும்புகிறாள் பூமிகா. அக்கொடியவனைச் சரவணனும் பூமிகாவும் எப்படி கண்டுபிடித்து தண்டிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. சரவணனாக பிரேம்ஜி நடித்துள்ளார். மிகவும் பாவப்பட்டவராக, நடக்கவும் நடிக்கவும் மிகவும் சிரமப்படுபவராக, ஆள் ஒரு மாதிரி ஒடுங்கிப் பரிதவிப்புடனே உள்ளார். சாமர்த்தியமாக அவரைக் காது கேளாதவராகச் சித்தரித்துச் சமாளித்துள்ளார் இயக்குநர் கருப்பையா முருகன். கொஞ்சம் பிசகினாலும் சிக்கலாகிவிடும் ஒரு கனமான கதைக்கருவிற்கு, ஆற்றின் மெல்லிய நீரோட்டம் போல் திரைக்கதை அமைத்துள்ளார்...
The GOAT விமர்சனம்

The GOAT விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
The Greatest Of All the Time - எல்லாக் காலத்திலும் மிகச் சிறந்தவர். Goat of the SATS (Special Anti Terrorism Squad) என்றழைக்கப்படும் நாயகன், பயங்கரவாதத்திற்கான எதிரான நடவடிக்கைகளில் மிகச் சிறப்பாகச் செயற்படுகிறார் எனப் பொருள் கொள்ளலாம். 'இனி நடிக்கப் போவதில்லை' என்ற விஜயின் முடிவிற்குப் பிறகு வந்த படம் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கு எகிறியிருந்தது. இரண்டு விஜய் இணைந்து கலக்கும் டீசர் அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்தது. நாயகன் M.S. காந்தி ஜீவனைத் தொலைத்து விடுகிறார். பதினாறு வருட சோகத்திற்கும் குற்றவுணர்ச்சிக்கும் பிறகு ஜீவன் கிடைத்துவிட்டாலும், அதன் பின் கண் முன்னாலேயே நண்பர்களைக் காப்பாற்ற இயலாமல் இழந்து விடுகிறார் காந்தி. கடைசியில் வில்லன் ராஜிவ் மேனனின் சூழ்ச்சிக்கு பலியாகி, M.S.காந்தி தங்கப்பதக்கத்தினைப் பெறுவதுதான் படத்தின் கதை. இளம் வயது ஜீவனாக நடித்துள்ள மாஸ்...
பிரேம்ஜியின் இசையில் ‘பார்ட்டி’ துவங்கியது

பிரேம்ஜியின் இசையில் ‘பார்ட்டி’ துவங்கியது

சினிமா, திரைத் துளி
அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சரோஜா படத்துக்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தயாரிக்கும் படம் பார்ட்டி. ஜூலை 12 அன்று, இந்தப் படத்தின் பூஜை நடந்தது. சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளம் பார்ட்டியில் பங்கேற்கிறது. முதல் முறையாக பிரேம்ஜி, வெங்கட் பிரபுவின் படத்துக்கு இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். பிஜி தீவுகளில் படமாக்கப்பட இருக்கும் ‘பார்ட்டி’ படத்தின் நட்சத்திர அறிமுகம், மிகப் பெரிய அளவில் வெங்கட் பிரபுவிற்கே உரிய பாணியில் நடந்தது. ‘பார்ட்டி’ மீதான எதிர்பார்பை உருவாக்கியுள்ளது வெங்கட் பிரபு & கோ....