Shadow

Tag: பெருமாள்முருகன்

அங்கம்மாள் விமர்சனம் | Angammal review

அங்கம்மாள் விமர்சனம் | Angammal review

சினிமா, திரை விமர்சனம்
சாகித்திய அகாதெமி விருது வென்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித்துணி என்ற சிறுகதையைத் தழுவி உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’ ஆகும். விபின் ராதாகிருஷ்ணன் இயக்க, கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப் படத்தில் அங்கம்மாள் என்ற மையக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கீதா கைலாசம். கீதா கைலாசத்துக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பரணி, இளைய மகன் சரண் ஆவர். அடிப்படையில் ரொம்பவே பிடிவாத குணத்தை உடைய கீதா கைலாசம் அழுத்தமான, தீர்க்கமான பெண்மணி. பரணி, அவரது மனைவி, சரண் என எல்லோருமே கீதா கைலாசத்தை எதிர்த்துப் பேசப் பயப்படுபவர்கள். பெரிதாகப் படிக்காத பரணி விவசாயம் செய்ய, இளைய மகன் சரணை மருத்துவம் படிக்க வைக்கிறார். நகரத்தில் ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலிக்க, பெண்ணின் தந்தையும் திருமணத்துக்கு ஒப்புக் கொள்கிறார். பெண் வீட்டாரைச் சந்திக்கும்போது தங்களைக் குறைவாக எடை...
கோடித்துணி – பெருமாள்முருகனின் கதை படமாகிறது

கோடித்துணி – பெருமாள்முருகனின் கதை படமாகிறது

சினிமா, திரைத் துளி
புகழ்பெற்ற தமிழாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்கிற சிறுகதை, திரைப்பட உருவாக்கம் பெறுகிறது. நடிகரும் பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அஞ்ஜோய் சாமுவேல் இப்படத்தில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார். இந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட நிலையில், மார்ச் மாத இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன. தாங்கள் தயாரிக்கும் முதல் படத்திற்கே எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகப் படத்தின் தய...
சேத்துமான் விமர்சனம்

சேத்துமான் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
பெருமாள் முருகனின் 'வறுகறி' எனும் சிறுகதையை மிக நேர்த்தியாக சேத்துமான் எனும் படமாக உருமாற்றியுள்ளார் இயக்குநர் தமிழ். பன்னியைக் கொங்கு வட்டாரத்தில் சேத்துமான் என்றழைப்பார்கள். கதை நடக்கும் களமாக மேற்கு கொடைக்கானலைத் தெரிவு செய்துள்ளனர். பெயர் போடும் போது ஒரு கதையை ஓவியத்தில் சொல்லி முடித்ததும், டைட்டில் க்ரெடிட் முடிந்த பின் படத்தின் கதைக்குள் செல்கின்றனர். மகனையும் மருமகளையும் இழந்த பூச்சியப்பன் தனது பேரனுடன் ஊரை விட்டு வெளியேறி, பண்ணாடி வெள்ளையனிடம் வேலைக்குச் சேருகிறார். உடல் சூட்டினைத் தணிக்க, பன்னியின் வறுத்த கறியைத் திண்பதில் ஆர்வம் காட்டுபவர் வெள்ளையன். ஆனால், ஊர் உலகமோ, பன்னிக்கறியை உண்பதை மிக ஏளனமாகப் பார்க்கிறது. குறிப்பாக வெள்ளையனின் மனைவியே, 'பீ திண்ணும் பன்னியைச் சாப்பிடுறது பீ திண்பதற்கு சமம்' என வெள்ளையனை அநியாயத்திற்கு அசிங்கப்படுத்துகிறார். கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்...
சேவல்களம் – ஒழுக்கத்தைத் தரும் ராஜபோதை

சேவல்களம் – ஒழுக்கத்தைத் தரும் ராஜபோதை

புத்தகம்
சுபமாய் அல்ல, பரம சுபமாய் முடிகிறது சேவல்களம் நாவல். அந்நிறைவைப் புறந்தள்ளி, மனம் குறையைத் தேடத் துவங்கி விடுகிறது. அகத்தின் நிலைகுலைவு, வாழ்வு தரும் ரணம் என கண் மூடி அனுபவிக்க நாவலில் ஏதுமில்லாமல் போவதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு வெறுப்போ, கசப்போ, வன்முறைச் செய்கையோ மனித மனதிற்குத் தேவைப்படுகிறது. ‘சமூகக் கட்டுப்பாடுகளாலும், நாகரீகத்தினாலும் தற்காத்துக் கொள்ளும் மனித மனம், தனது ஆழ்மன வன்முறை உணர்ச்சிகளுக்கு உபத்திரவம் இல்லாத வடிகால்களைத் தேடிக் கொள்ளும்’ என்கிறது உளவியல். இதையே தான் காலந்தொட்டு செய்தி ஊடகங்கள் செய்து வருகின்றன. இதை, எழுத்தாளர் சுஜாதா தன் பாணியில், “நல்ல செய்தி கொடுத்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். ரேட்டிங் விழுந்துவிடும்” எனச் சொல்லியுள்ளார். அதுவும் இன்றைய நேரடி விவாதக்களக் காலத்தில், மனிதர்கள் மீதான அவநம்பிக்கையைப் பரப்புவது என்பது முற்றிய நிலையில் இருக்கிறது. அதன் வெ...