Shadow

Tag: பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்

“ரசிகர்களை அறிவாளியாளியாக நினைத்துப் படமெடுத்தால் வெற்றி பெறலாம்” – இயக்குநர் கெளரவ் நாராயணன்

“ரசிகர்களை அறிவாளியாளியாக நினைத்துப் படமெடுத்தால் வெற்றி பெறலாம்” – இயக்குநர் கெளரவ் நாராயணன்

சினிமா, திரைச் செய்தி
BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விறுவிறுப்பான த்ரில்லராகத் தயாராகி இருக்கும் இப்படம், ஜூலை 25 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் B.T. அரசகுமார், ''அண்ணன் கே. ராஜன் வந்தவுடன் 'கயிலன்' படத்தின் கதை என்ன, க்ரைம் ஸ்டோரியா, ஃபேமிலி ஸ்டோரியா எனக் கேட்டார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அது என்ன என்று எனக்குத் தெரியாது. இயக்குநர் அஜித் மீதான நம்பிக்கையினால் நான் அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ஏதோ சம்பிரதாயத்திற்காக ஒரே ஒரு நாள் படப்பிடிப்புத் தளத்திற்கு வாருங்கள் என்றனர். அதற்காக சில மணித்துளிகள் அங்குச் சென்றேன்....
சுத்தானந்த பாரதியின் திருக்குறள் ஒலிபெயர்ப்பு

சுத்தானந்த பாரதியின் திருக்குறள் ஒலிபெயர்ப்பு

சினிமா, திரைச் செய்தி
வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக நடித்துத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்தப் படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் பேசுகையில், "இது போன்ற விழாக்களில் லேசாக பேதை, பெதும்பை, ரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனத் தமிழில் பேச ஆரம்பித்துவிட்டால், உடனே செல்ஃபோனை எடுத்துக் காதில் வைத்து கொண்டு, ‘மாப்ள இதோ வந்துவிட்டேன்’ என்று எழுந்து விடுகிறார்கள். இங்குள்ள நடிகைகளில் பலரும் தமிழ் தெரியவில்லை என்றாலும் தமிழில் பேச முயற்சி செய்கிறார்கள். இதற்காகத் திரையுலகினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பள்ளிக்கூடங்களில் கூட தமிழ் இல்லாத இடத்தில் இவர்களையெல்லாம் திரையில் தமிழில் பேச வைத்திருப்பதற்கு இயக்குநர் பா.விஜய...