
மணியார் குடும்பம் விமர்சனம்
தனது மகன் உமாபதியை அவையத்துள் முந்தி இருக்கச் செய்ய, கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி, மணியார் குடும்பத்தை இயக்கித் தயாரித்துள்ளார் தம்பி ராமையா.
"லவ் பண்ணுங்க சார். லைஃப் நல்லா இருக்கும்" என மைனா படத்தில் பேசிய வசனத்தை ஒன்-லைனாக எடுத்துக் கொண்டுள்ளார் தம்பி ராமையா. மாமன் மகனான குட்டிமணியைக் காதலிக்கிறாள் அத்தை மகளான மகிழம்பூ. அந்தக் காதலால் குட்டிமணியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை.
காவல்துறை உயரதிகாரி நல்லவனாக சமுத்திரக்கனி இரண்டு காட்சிகளில் தோன்றி மறைகிறார். "என் தம்பி" என்ற அடைமொழியுடன் அவரது பெயரைத் திரையில் காட்டுகிறார் தம்பி ராமையா. 'கலக்கப் போவது யாரு' ராமரும் தங்கதுரையும், சிங்கம்புலி, சிங்கமுத்து, ராதாரவி Y.G.மகேந்திரன் போன்றோர் கெளரவத் தோற்றத்தில் வருகின்றனர். அனைவரும் தனக்குரிய காட்சிகளை நிறைவாகச் செய்துள்ளனர். ஒரு பாடலுக்கு யாஷிகா ஆனந்த் நடனமாடியுள்ள...


