Shadow

Tag: மோனிகா சின்னகொட்லா

முஸ்தபா முஸ்தபா விமர்சனம் | Mustafa Mustafa review

முஸ்தபா முஸ்தபா விமர்சனம் | Mustafa Mustafa review

சினிமா, திரை விமர்சனம்
முப்பது வருடங்களுக்கு முன் வெளியான 'காதல் தேசம் (1999)' படத்தில், நட்பின் மேன்மையையும் இணக்கத்தையும் எடுத்தியம்பும் பாடலின் தொடக்கச் சொற்கள் 'முஸ்தபா முஸ்தபா' ஆகும். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வந்த அப்பாடல் நட்பிற்கான பாடலாக மிகவும் பிரசித்தி பெற்றது. இப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஆழமான நட்பினைச் சொல்லும் விதமாக இத்தலைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. டிவி சேனலில் வேலை செய்யும் கார்த்திக், எப்பொழுதோ ஒரு திரைப்படத்தில் ஒருநாள் மட்டுமே நடித்த ஒரு மார்க்கமான காட்சி, ஆபாச (porn) இணையதளத்தில் வெளியாகிவிடுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் காதலியோடு திருமணம் என்ற நிலையில், நண்பன் வாசுவுடன் இணைந்து, அந்த வீடியோவை நீக்க படாதபாடுபடுகிறான் கார்த்திக். வாசுவும் கார்த்திக்கும் அந்த வீடியோவைக் கல்யாணத்திற்கு முன் நீக்கினார்களா இல்லையா என்பதுதான் கலகலப்பான படத்தின் முடிவு. ஹேக்கர் சிட்டியாகக் க...
தோழர் வெங்கடேசன் விமர்சனம்

தோழர் வெங்கடேசன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டும் கதையை, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதியுள்ளார் இயக்குநர் மகாசிவன். அரசுப் பேருந்தின் ஸ்டியரிங் லாக் ஆகி, லட்சுமி சோடா ஃபேக்டரி முதலாளியான வெங்கடேசன் மீது மோதிவிடுகிறது. அவ்விபத்தில் அவரது இரண்டு கையையும் பறி கொடுக்கிறான் வெங்கடேசன். நஷ்ட ஈட்டிற்காக நீதி மன்றத்திற்கு நடையாக நடக்கிறான். தீர்ப்பு சாதகமாக அமைந்த பின்பும், அவருக்கு நியாயம் கிடைக்காமல் அவஸ்தைகள் தொடர்வதுதான் படத்தின் கதை. ‘ஓய்ய்.. நானொரு முதலாளி’ என்ற குரலை மிக அழுத்தமாகப் பதிகிறான் வெங்கடேசன். பதிவதோடு மட்டுமல்லாமல், தனக்குக் கீழ் வேலை பார்ப்பவரிடத்தில் அதைக் காட்டவும் செய்கிறான். அப்படி அதிகாரத்துடன் நடந்து கொள்வதைக் கெளரவமாகவும் கருதுகிறான். இத்தகைய பூர்ஷ்வாத்தனத்தை உடைய வெங்கடேசனுக்கு தோழர் என்ற அடைமொழி வைத்திருப்பது பயங்கரமான மு...