Shadow

Tag: ராகவ் மிர்தாத்

பன் பட்டர் ஜாம் விமர்சனம் | Bun Butter Jam review

பன் பட்டர் ஜாம் விமர்சனம் | Bun Butter Jam review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நல்ல கலகலப்பான யூத்-ஃபுல்லான படம். ராஜு ஜெயமோகன் பாவ்யாவைக் காதலிக்கிறார். ராஜுவின் நண்பனும் அதே பெண்ணைக் காதலிக்கிறார். ராஜுவின் பக்கத்து வீட்டுப் பெண்ணான ஆதியா, VJ பப்புவைக் காதலிக்கிறார். யார் யாருடன் இணைந்தார்கள் என்பதுதான் படத்தின் முடிவு. படத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்கள் அனைத்தையும் மிக நேர்த்தியாக எழுதியுள்ளார் இயக்குநர் ராகவ் மிர்தாத். சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, கெளரவத் தோற்றத்தில் நடித்துள்ள விக்ராந்த், ராஜுவின் நண்பனாக வரும் மைக்கேல் தங்கதுரை, VJ பப்பு, பப்புவின் கோவக்கார அப்பா என கதாபாத்திர வடிவமைப்பிலேயே படத்தின் கலகலப்பிற்கு உறுதி செய்துள்ளார் ராகவ் மிர்தாத். இரண்டாம் பாதியில், காதலியின் வீட்டில் மாட்டிக் கொண்டு, VJ பப்பு திண்டாடும் காட்சிகள் ஓர் உதாரணம். முதற்பாதியில், ஆதியாவும் ராஜுவும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் அனைத்துமே கலகலப்பிற்கு உத்திரவாதமளிக்கி...
பிக்பாஸ் ராஜு நாயகனாக அறிமுகமாகும் “பன் பட்டர் ஜாம்” திரைப்படம்

பிக்பாஸ் ராஜு நாயகனாக அறிமுகமாகும் “பன் பட்டர் ஜாம்” திரைப்படம்

சினிமா, திரைச் செய்தி
Rain Of Arrows Entertainment சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் 'பன் பட்டர் ஜாம்' படத்தைத் தயாரிக்கிறார். ‘எண்ணித்துணிக’ படத்தை அடுத்து இரண்டாவது படமாக இப்படத்தைத் தயாரிக்கிறார்.ராஜூ நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சைஸ் ஜீரோ’ படத்திற்கு வசனமும், தேசியவிருது வென்ற ‘பாரம்’ படத்தில் திரைக்கதை மற்றும் வசனமும் எழுதி இருக்கிறார். ‘காலங்களில் அவள் வசந்தம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் இயக்கும் இரண்டாவது படம் இது. பிக்பாஸ் புகழ் ராஜு, ஆதியா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா நடிப்பில் இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகி வரும் திரைப்படம் ”பன் பட்டர் ஜாம்”. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இறந்தகால வலிகளின் சுமைகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயங்...
காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்

காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாரம் படத்திற்குத் திரைக்கதை எழுதிய ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள முதற்படம். ஆனால் சீரியசான படமாக இல்லாமல், ரொமெடி (ரொமாண்டிக் காமெடி) வகையைச் சேர்ந்த படமாகக் காலங்களில் அவள் வசந்தம் படத்தை இயக்கியுள்ளார் ராகவ். ராதேவிற்கு, ஷ்யாமின் மீது முதல் பார்வையிலேயே காதல் எழுகிறது. சினிமாவில் காணும் ரொமான்ஸைத் தனது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென உன்னத லட்சியம் உடைய ஷ்யாம், ராதேவைக் கல்யாணம் செய்து கொள்கிறான். எல்லாப் பெண்ணுகளிடமும் ஒரே ரொமான்ஸ் பேட்டர்னை முயற்சி செய்யும் ஷ்யாமின் ரொமான்ஸ் பொய்யானது எனச் சுட்டிக் காட்டுகிறாள் ராதே. அவர்களுக்கு இடையேயான ஊடல் பிரியும் அளவு பெரிதாக, முடிவில் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. அறிமுக நாயகனான கெளஷிக் ராம், ஷ்யாம் கதாபாத்திரத்திற்கு மிக அழகாகப் பொருந்தியுள்ளார். படத்தில் சிரித்த முகத்துடனேயே வரும் ராதே பாத்திரத்தை ஏற்றிருக்கும் அஞ்சலி நாயருடன...