
கன்னி மாடம் – ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை
முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார் போஸ் வெங்கட். அவர் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தைப் பிடித்திருப்பவர். தற்போது புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார்.
விழாவில் பேசிய ரோபோ சங்கர், “நான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த மேடை எனக்கு மிக நெருக்கமானது. முதல் முறையாகப் பாடகராக இங்கு மேடையேறியுள்ளேன். என்னைப் பாடகராக அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் ஹரி சாய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு அண்ணன் போஸ் வெங்கட்டுக்கு நன்றி. அவர் என் வாழ்வில் ஒவ்வொரு படியிலும் பேருதவியாக நின்றிருக்கிறார். பல வருடங்கள் முன்பாகவே இந்தக் கதையை என்னிடம் கூறியுள்ளார். ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும். தான் முதன் முதலாகப...


