
சீசரின் பிரம்மாண்டமான போர்
விஞ்ஞான ரீதியிலான நவீனங்களில் ‘ஆக்ஷன்’ அம்சங்களை அழகுறப் பாங்காகப் பொறுத்தி, உணர்வுபூர்வமான காட்சியமைப்புகளைப் பொருத்தமாக இடையே இணைத்து உருவாக்கப்படும் பிரம்மாண்டமான படைப்புகள் பெரிதாகப் பேசப்படும்.
‘தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ தொடர் திரைப்படங்கள் அத்தகைய அம்சங்கள் நிறைந்தவை. அத்திரைத் தொடர்களின் 4-வது பதிப்பு, 1972 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கான்குவெஸ்ட் ஆஃப் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ ஆகும்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு, 2011 இல் அச்சங்கிலித் தொடர், ‘தி ரைஸ் ஆஃப் தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ என்கிற தலைப்பில் ரூபர்ட் வியாட்டின் இயக்கத்தில் உருவானது. அதன் தொடர் படம் தான், 2014இல் வெளியான, ‘டான் ஆஃப் தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’. அப்படத்தை இயக்கியிருந்த மேட் ரீவ்ஸ் உருவாக்கியுள்ள சங்கிலித் தொடரின் அடுத்த பதிப்புதான், ‘வார் ஃபார் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’. மேற்குறிப்பிட்ட மூன்று படங்களின் திரைக்கதையை அமை...

