Shadow

Tag: வினோத்

தூக்குதுரை விமர்சனம்

தூக்குதுரை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பழங்கால காதல் கதை, பழங்கால பேய்க்கதை இரண்டும் சேர்ந்தால் அதுதான் தூக்குதுரை திரைப்படத்தின் கதை. இனியாவின் குடும்பம் திருவிழாக்களில் ஊரின் முதல் மரியாதையைப் பெறும் ஜமீன்தார் குடும்பம். திருவிழாக்களில் புரொஜெக்டர் மூலம் படம் ஓட்டிக் காட்டும் யோகிபாபுவிற்கும் இனியாவிற்கும் காதல் மலர்கிறது. தங்கள் காதலைக் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு ஊரைவிட்டு  ஓட முயற்சி செய்கிறார்கள். ஊர் மக்களிடம் மாட்டிக் கொள்ளும் அவர்களில் யோகிபாபுவை இனியா குடும்பம் ஊர் மக்களோடு சேர்ந்து ஒரு கிணற்றில் வைத்து எரித்துக் கொன்றுவிடுகிறார்கள்.  அந்த கிணற்றுக்குள் ஜமீன் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு விலைமதிப்புமிக்க கிரீடம் மாட்டிக் கொள்கிறது. அதை எடுக்க வருபவர்களை யோகிபாபு பேயாக வந்து மிரட்டுகிறார். அதை மீறி கிரீடத்தை கைப்பற்றினார்களா இல்லையா என்பது மீதிக்கதை. யோகிபாபு இருந்தாலே ...
கோலி சோடா 2 விமர்சனம்

கோலி சோடா 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆட்டோ ஓட்டுநனான சிவா, பரோட்டா கடையில் வேலை செய்பவனான ஒலி, தாதாவுக்கு கார் ஓட்டிக் கொண்டிருந்தவனான மாறன் என மூன்று இளைஞர்களின் வாழ்க்கையிலும் நடக்கும் எதிர்பாராச் சம்பவங்கள், ஒரு புள்ளியில் அவர்களை நெருக்குகிறது. அப்புள்ளியில் இணையும் அவர்கள், தங்களை நெருக்கும் நபர்களிடம் இருந்து எப்படித் திரும்பி நின்று எதிர்க்கின்றனர் என்பதே படத்தின் கதை. மூன்று இளைஞர்களையும் ஒரு ஜாதிக் கட்சி மீட்டிங் இணைக்கிறது. அதற்கு முன்பே, மூவருக்கும் பொதுவான ஒரு நலம்விரும்பியாக ஃபார்மசி வைத்திருக்கும் கணேசன் உள்ளார். கணேசனாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். வீறு கொண்டு சீறும் நபராக இல்லாமல் பொறுப்புணர்வுள்ள விவேகியாக உள்ளார். ஆனாலும், பேசிக் கொண்டே இருக்கும் பாத்திரத்தில் இருந்து அவரை விலக்கி வைத்துப் பார்க்க விஜய் மில்டனாலும் முடியவில்லை. நடேசன் எனும் சமுத்திரக்கனி ஏற்றிருக்கும் பாத்திரத்திற்குச் சீரியசான ஃப்ளாஷ்-பேக்...