Shadow

Tag: ஸ்ரீராம் கார்த்திக்

மயிலாஞ்சி விமர்சனம் | Mylanji review

மயிலாஞ்சி விமர்சனம் | Mylanji review

சினிமா, திரை விமர்சனம்
தனது காதலை ஏற்காவிட்டால், முகத்தில் அமிலம் ஊற்றும் இளைய தலைமுறையின் போக்கைக் கண்டு கவலையுறும் மனநல மருத்துவரான அர்ஜுனன், ஒரு மென்மையான, மேன்மையான காதலைத் திரையில் சொல்ல விழைந்துள்ளார். அதற்காகத் தனது அஜய் அர்ஜும் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படமே மயிலாஞ்சியாகும். மயிலாஞ்சி (அல்லது மைலாஞ்சி) என்பது மருதாணி (Henna) தாவரத்தைக் குறிக்கும் சொல்லாகும். புகைப்படக் கலைஞரான சூர்யா, அரிய வகை பறவையினத்தைப் படமெடுக்க நீல்கிரி வந்து சேருகிறார். அங்கே வசிக்கும் சாரு மீது காதல் வயப்படுகிறார். சாருவோ, தான் வேறு ஒருவரைக் காதலிப்பதாகத் தெரிவித்து, சூர்யாவிடமே காதலுக்கு உதவும்படி கேட்கிறார். அவர்களது காதல் என்னானது என்பதே படத்தின் கதை. சூர்யாவாக நடித்துள்ள கன்னிமாடம் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக்கும், சாருவாக க்ரிஷா குரூப்பும் நடித்துள்ளனர். ஓவியம் போல் திரைச்சட்டகங்களை (Frames) அழகுறச் செதுக்...
மெஸன்ஜர் விமர்சனம் | Messenger review

மெஸன்ஜர் விமர்சனம் | Messenger review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் புதுவிதமான களங்களில், கான்செப்ட்களில் திரைப்படங்கள் வெளிவருவது கொஞ்சம் குறைந்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால் கொரியன் திரைப்படங்களிலும், சீரீஸ்களிலும் பல பேன்டஸி கான்செப்ட்கள் இன்றும் தினம் தினம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மாதிரியான ஒரு ஃபேன்டஸி கான்செப்ட்டில் உருவாகி இருக்கும் படம் தான் “மெஸஞ்ஜர்” ஆகும். ரமேஷ் இளங்காமணி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், மனிஷா ஸ்ரீ, ஃபாத்திமா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம் ஃபேண்டஸி கான்செப்டில் உருவாகியிருக்கும் ஒரு காதல் திரைப்படமாகும். காதல் தோல்வியில் இருக்கும் சக்திவேலன், அதில் இருந்து வெளிவர முடியாமல் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தற்கொலை செய்து கொள்ளாதீங்க என ஒரு மெசேஜ் வருகிறது. அனிதா என்ற பெண் அனுப்பியிருக்கும் அந்த மெசேஜை படித்து மேலும் அவரிடம் பேச, அனிதா ...
கன்னிமாடம் விமர்சனம்

கன்னிமாடம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கன்னிப் பெண்கள், கர்ப்பினிப் பெண்கள், பெண் துறவிகள் என பெண்கள் தனியே தங்கும் இடத்திற்குப் பெயர் கன்னிமாடம் ஆகும். இந்தப் படத்தின் நாயகியான மலர்க்கோ தங்க ஓரிடம் இல்லா மல் தவிக்கிறார். படத்தின் தகிப்பிற்குக் காரணமோ, படம் தொட்டுள்ள ஆணவக்கொலை எனும் விஷயமாகும். நாயகன் அன்புவின் தங்கையை, அவனது தந்தையே சாதி ஆணவத்தில் படுகொலை செய்து விடுகிறார். தன் குடும்பமே சிதைந்துவிட்டது என வருத்தத்தில் இருக்கும் அன்பு, சென்னைக்கு ஓடி வரும் மலர் - கதிர் ஜோடியை அரவணைக்கிறான். கதிர் விபத்தில் இறந்து விட, நிராதரவாய் இருக்கும் கர்ப்பிணியான மலரைப் பாதுகாக்கும் பொறுப்பு அன்புவிற்கு ஏற்படுகிறது. இந்தச் சமூகக் கட்டமைப்பில் அது அத்தனை எளிதான காரியமா என்ன? அன்புக்கு நேரும் சோதனையும் சவால்களும் தான் படத்தின் கதை. 'இன்னுமா சாதி பார்க்கிறாங்க?' என அப்பாவித்தனமாய்க் கேட்கும் கவுன்சிலர் அழகுராணியாக ரோபோ ஷங்கரின் மனைவி பிரி...