Shadow

Tag: 100 thirai vimarsanam

100 விமர்சனம்

100 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது புஜ பல பராக்கிரமத்தால், தீயவர்களையோ, சமூக விரோதிகளையோ அடித்து உதைத்து அவர்களைச் சிறையில் அடைத்து, நேர்மையான காவல்துறை அதிகாரியாக மிளிர வேண்டுமென்பது அதர்வாவின் லட்சியம். ஆனால், அவசர உதவி கோரி எண் 100-இற்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்கும் கண்காணிப்பு அறையில் அவரைப் பணிக்கு அமர்த்திவிடுகின்றனர். நேடியாகக் கதைக்குள் செல்லாமல், படத்தின் முதற்பாதி தேவையில்லாத காட்சிகளால் அலைக்கழிக்கிறது. அதர்வாவின் தந்தையாக பருத்தி வீரன் சரவணன், அம்மாவாக நிரோஷா, காதலியாக ஹன்சிகா, நண்பராக 'எருமை சாணி' விஜய் ஆகியோர் கதைக்கு எவ்விதத்திலும் உதவவில்லை. தயாரிப்பாளரான ஆரா சினிமாஸ் மகேஷ், அன்வர் எனும் பாத்திரத்தில் அதர்வாவின் நண்பராக நடித்துள்ளனர். ஓர் அழகான பாத்திரத்திற்கு, கொஞ்சம் லெத்தார்ஜிக்கான உடற்மொழியாலும் நடிப்பாலும், போதுமான நியாயத்தைச் செய்யத் தவறிவிடுகிறார். மறைந்த நடிகர் சீனு மோகனின் கதாபாத்திர வா...