Shadow

Tag: 1000 Crore Club

பாகுபலி – 1000 கோடி நாயகன்

பாகுபலி – 1000 கோடி நாயகன்

சினிமா, திரைச் செய்தி
பாகுபலி 2-இன் நட்சத்திர நாயகன் பிரபாஸ், வசூலில் ஆயிரம் கோடிகளைக் கடந்த முதல் இந்தியத் திரைப்பட நாயகன் என்ற பெருமையை ஈட்டியுள்ளார். திரையிட்டு பத்து நாட்களுக்குள் அந்த வசூல் சாதனையைப் படைத்திருப்பது ஒரு மாபெரும் சரித்திரமாகும். பாகுபலி 2 திரையிடப்பட்ட ஒன்பது நாட்களில் இந்தியாவில் ரூ. 800 கோடியையும், அயல் நாடுகளில் ரூ. 200 கோடியையும் வசூலித்து இச்சாதனையை படைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 121 கோடியில் துவங்கிப் பின், வெகு வேகமாய் தொடர்ச்சியாய் அடுத்தடுத்த நாட்களில் பல நூறு கோடிகளைக் கடந்து ஒன்பதாவது நாளில் ரூ. 1000 கோடியைத் தொட்டிருக்கிறது. இந்தக் காவிய படைப்பில், அமரேந்திர பாகுபலியாய்த் தன்னுடைய அசாத்தியமான, அப்பழுக்கற்ற நடிப்பை வெளிப்படுத்திய பிரபாஸ், உலகளாவிய அளவில் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தேசங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து, பாகுபலி 2 க்கு கிடைத்திருக்ககூடிய இந்த இமாலய வெற...