32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பாகுபலி – 1000 கோடி நாயகன்

Dinesh R சேலம் Published: 08/05/2017 2 நிமிட வாசிப்பு Updated: 14/07/2017 சினிமா
எழுத்து அளவு:

Bahubali in 1 billion club

பாகுபலி 2-இன் நட்சத்திர நாயகன் பிரபாஸ், வசூலில் ஆயிரம் கோடிகளைக் கடந்த முதல் இந்தியத் திரைப்பட நாயகன் என்ற பெருமையை ஈட்டியுள்ளார். திரையிட்டு பத்து நாட்களுக்குள் அந்த வசூல் சாதனையைப் படைத்திருப்பது ஒரு மாபெரும் சரித்திரமாகும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பாகுபலி 2 திரையிடப்பட்ட ஒன்பது நாட்களில் இந்தியாவில் ரூ. 800 கோடியையும், அயல் நாடுகளில் ரூ. 200 கோடியையும் வசூலித்து இச்சாதனையை படைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 121 கோடியில் துவங்கிப் பின், வெகு வேகமாய் தொடர்ச்சியாய் அடுத்தடுத்த நாட்களில் பல நூறு கோடிகளைக் கடந்து ஒன்பதாவது நாளில் ரூ. 1000 கோடியைத் தொட்டிருக்கிறது.

இந்தக் காவிய படைப்பில், அமரேந்திர பாகுபலியாய்த் தன்னுடைய அசாத்தியமான, அப்பழுக்கற்ற நடிப்பை வெளிப்படுத்திய பிரபாஸ், உலகளாவிய அளவில் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

தேசங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து, பாகுபலி 2 க்கு கிடைத்திருக்ககூடிய இந்த இமாலய வெற்றிக்குத் தன்னுடைய ரசிகர்களுக்கும், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அவர்களுக்கும் பிரபாஸ் தன்னுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார்.

படத்தின் முன்னணி நாயகன் கூறும்போது, “மகத்தான இந்தத் தருணத்தில் என்னுடைய ஒவ்வொரு ரசிகரையும் ஆரத் தழுவி மகிழ்கிறேன். அவர்கள் என் மீது வைத்துள்ள அன்பில் திளைத்து நெகிழ்ந்து போய் இருக்கிறேன். நான் சிரமேற்கொண்டு எடுத்த அத்தனை முயற்சிகளும் படக்காட்சிகளில் சிறப்பாக அமைந்து, இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள உங்களுடைய பேரன்பைப் பெற்று தந்துள்ளது. மேலும் இத்தனைப் பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுக் காவியத்தில், என் மீது நம்பிக்கை வைத்து, என்னையும் இந்தப் பயணத்தில் இணைத்துக் கொண்டு, எனக்கொரு முக்கிய பங்களித்து, என்னை ஊக்குவித்துச் சிறப்புற இயக்கி, இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அவர்களுக்கு மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் என்னுடைய நன்றியைத் தெரிவிக்கிறேன்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.