1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா
எண்ணிக்கையை விட என்ன படம் செய்கிறோம் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் ஜீவா.
“சங்கிலி புங்கிலி படமும், கலகலப்பு-2 படமும் வெற்றி பெற்று எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அதற்குப் பிறகு நிறைய கதைகள் கேட்டேன். அதில் சிறந்ததாக கொரில்லா, ஜிப்ஸி என இரண்டை மட்டும் தேர்வு செய்தேன். இந்த இரண்டு படங்களும் ரொம்பச் சிறப்பாக வந்திருக்கு. தற்போது மொத்தம் ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்போ சூப்பர்குட் பிலிம்ஸ் 90வது படமாக SGF 90 படத்தில் நானும், அருள்நிதியும் சேர்ந்து நடிக்க, படப்பிடிப்பு விறுவிறுப்பா போயிட்டிருக்கு. படத்தின் தலைப்பு கூடிய சீக்கிரம் சொல்வோம். ஜாலியான படமா இருக்கும்” என்றார் ஜீவா.
மல்டி-ஸ்டார் படங்களை எப்படி செலக்ட் செய்றீங்க?
“முதல்ல கதை. அதற்கப்புறம் கேரக்டர். இரண்டும் பிடிச்சிருந்தா ஓ.கே சொல்வேன். நல்ல டீம் அமைஞ்சா நடிக்கத் தயாராயிடுவேன். அப்படி நடிச்சி ஹிட்டான படம் தா...