32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா

Dinesh R சேலம் Published: 12/01/2019 2 நிமிட வாசிப்பு Updated: 08/04/2019 சினிமா
எழுத்து அளவு:

Jeeva-in-1983-world-cup

எண்ணிக்கையை விட என்ன படம் செய்கிறோம் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் ஜீவா.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“சங்கிலி புங்கிலி படமும், கலகலப்பு-2 படமும் வெற்றி பெற்று எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அதற்குப் பிறகு நிறைய கதைகள் கேட்டேன். அதில் சிறந்ததாக கொரில்லா, ஜிப்ஸி என இரண்டை மட்டும் தேர்வு செய்தேன். இந்த இரண்டு படங்களும் ரொம்பச் சிறப்பாக வந்திருக்கு. தற்போது மொத்தம் ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்போ சூப்பர்குட் பிலிம்ஸ் 90வது படமாக SGF 90 படத்தில் நானும், அருள்நிதியும் சேர்ந்து நடிக்க, படப்பிடிப்பு விறுவிறுப்பா போயிட்டிருக்கு. படத்தின் தலைப்பு கூடிய சீக்கிரம் சொல்வோம். ஜாலியான படமா இருக்கும்” என்றார் ஜீவா.

மல்டி-ஸ்டார் படங்களை எப்படி செலக்ட் செய்றீங்க?

“முதல்ல கதை. அதற்கப்புறம் கேரக்டர். இரண்டும் பிடிச்சிருந்தா ஓ.கே சொல்வேன். நல்ல டீம் அமைஞ்சா நடிக்கத் தயாராயிடுவேன். அப்படி நடிச்சி ஹிட்டான படம் தான் கலகலப்பு 2.”

முதல் முதலா ஹிந்தி படத்துல நடிக்கிறீங்க. அது பற்றி?

” ‘1983 வேர்ல்ட் கப்’ என்ற படத்துல நடிக்கிறேன். ரன்வீர் சிங் நடிக்கிறார். மல்டி ஸ்டார் மூவி. பாகுபலி எப்படி ஸ்கிரீன்ல பிரம்மாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்திச்சோ, அது மாதிரி இந்தப் படமும் இருக்கும். 100 கோடிக்கு மேல செலவு செய்து எடுக்குற படம்.

நான் கிரிக்கெட்ல ரொம்ப ஆர்வம் உள்ளவன். நிறைய கிரிக்கெட் மேட்ச்ல ஜாயின் பண்ணி இருக்கேன். ஜெயிச்சிருக்கேன். அப்படிப் பட்ட எனக்குக் கிடைச்ச முதல் ஹிந்திப் படமே கிரிக்கெட் சம்மந்தப்பட்ட படமா அமைஞ்சிருக்கு. எப்போ கேமிரா முன்னாடி நிப்போம்னு ஆர்வமா இருக்கேன்.

1983இல இந்தியா வேர்ல்ட் கப் ஜெயிச்சி பெருமை தேடிக் கொடுத்த அந்தச் சம்பவங்கள் தான் கதைக்களம்.

கிட்டத்தட்ட 100 நாள் லண்டன்ல ஷுட்டிங். அதுக்கு இப்பவே தயாராயிட்டு இருக்கோம். அப்போ அந்த டீம்ல இருந்த நல்ல கிரிக்கெட்டர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சார், அவரது கதாபாத்திரத்தில் நடிக்கிறது எனக்குப் பெருமை தானே! அந்த கேரக்டர் எனக்கு கிடைச்சது மிகப் பெருமையான விஷயம். மே மாசம் ஷுட்டிங் லண்டன்ல ஆரம்பிக்குது.

லகான், M.S.தோனி படங்கள் வரிசையில், 1983 வேர்ல்ட் கப் படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கு.

இனிமே யானை மாதிரி நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் பதியற மாதிரி இருக்கும். 2019 எனக்கு மட்டுமில்ல, சினிமாவுக்கே நல்லது நிறைய நடக்கும்னு நிறைய நம்பிக்கை இருக்கு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். சினிமாவுக்கு நல்ல வழி கிடைக்க வேண்டும். அனைவருக்கும் தை பொங்கல் வாழ்த்துகள். உழவு தொழில் சிறக்கட்டும். உயரிய நிலை அடையட்டும்” என்றார் ஜீவா.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.