Shadow

Tag: 90 ML

90 ML விமர்சனம்

90 ML விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழில் வந்துள்ள மிக முக்கியமான படம். இப்படியொரு படம் வருவது மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளிக்கிறது. தண்ணியடிப்பது, தண்ணியடித்துவிட்டுக் காதலியிடம் காதலின் மாண்பையும் மகத்துவத்தையும் பிதற்றுவது, காதலியின் வீட்டிற்குச் சென்று கலாட்டா செய்வது, காதலியின் அப்பாவை ஒருமையில் பேசுவது, ஆற்றோரத்திலோ கடலோரத்திலோ 'பொண்ணுங்கள லவ் பண்ணக்கூடாது' என போதையில் நண்பர்களுக்குப் போதிப்பது என்பதெல்லாம் தமிழ்ப்பட நாயகர்கள் காலந்தோறும் கடைபிடித்து வரும் கலாச்சாரம். வாரத்துக்கு ஒரு படமாவது, பாரில் குத்துப்பாட்டு இல்லாமல் வருவதில்லை. சிகரெட் பிடிப்பது ஹீரோயிசம், தண்ணியடிப்பது ஆண்களின் பிறப்புரிமை என்பது சமூகத்தில் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால், பெண்கள் குடித்தால் மட்டும் கலாச்சாரம் என்னாவது என்ற பதற்றம் ஆண்களுக்குத் தொற்றிக் கொள்கிறது. ஆண்கள் குடிப்பது தவறில்லை; பெண...
90 ML: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஆன் ஓவியா ஆர்மி

90 ML: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஆன் ஓவியா ஆர்மி

சினிமா
நம்ம கூடவே ஒரு ஃப்ரெண்ட் இருப்பான். நாம உருப்படக்கூடாதுன்னே கடவுள் அவனை ஃப்ரெண்டா படைச்சிருப்பாரு. அந்த ஏழரை நாட்டு சனி நாம எங்க போனாலும் விடாது. அது போலத்தான் ஒரு அப்பார்ட்மென்ட்ல நல்ல வாழ்ந்துக்கிட்டு இருந்த ரெண்டு குடும்பப் பெண்கள், ஒரு வேலைக்குப் போற பேச்சிலர் பொண்ணு. இந்த மூணு பேரும் நிம்மதியா குடும்பம், குழந்தைன்னு வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. உடனே சனி பகவான் கடுப்பாகி நல்ல இருந்த மூணு பேரையும் நாசமாக்க ரீட்டான்னு (ஓவியா) ஒரு ஏழரை நாட்டு சனிய அனுப்பி வைக்கிறார். அந்தப் பொண்ணு அந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு வரும்போதே, "புகைப்பிடித்தல் உடல் நலத்துக்குத் தீங்கானது" என்ற ஸ்லைட் ப்ரொடக்சன் யூனிட்ல செஞ்சு வச்சது வேஸ்ட் ஆகிடுமேன்னு ஒரு நல்ல எண்ணத்துல தம் அடிச்சிக்கிட்டே அப்பார்ட்மெண்ட்டுக்கு வருது. அதுக்கப்புறம் வீட்டு சாவி இல்லையா என்ன எழவோ. எல்லாப் பொருட்களையும் அப்பார்ட்மெண்ட் வாசலையே போ...