Shadow

90 ML: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஆன் ஓவியா ஆர்மி

Surgical-strike-on-Oviya-army

நம்ம கூடவே ஒரு ஃப்ரெண்ட் இருப்பான். நாம உருப்படக்கூடாதுன்னே கடவுள் அவனை ஃப்ரெண்டா படைச்சிருப்பாரு. அந்த ஏழரை நாட்டு சனி நாம எங்க போனாலும் விடாது. அது போலத்தான் ஒரு அப்பார்ட்மென்ட்ல நல்ல வாழ்ந்துக்கிட்டு இருந்த ரெண்டு குடும்பப் பெண்கள், ஒரு வேலைக்குப் போற பேச்சிலர் பொண்ணு. இந்த மூணு பேரும் நிம்மதியா குடும்பம், குழந்தைன்னு வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க.

உடனே சனி பகவான் கடுப்பாகி நல்ல இருந்த மூணு பேரையும் நாசமாக்க ரீட்டான்னு (ஓவியா) ஒரு ஏழரை நாட்டு சனிய அனுப்பி வைக்கிறார். அந்தப் பொண்ணு அந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு வரும்போதே, “புகைப்பிடித்தல் உடல் நலத்துக்குத் தீங்கானது” என்ற ஸ்லைட் ப்ரொடக்சன் யூனிட்ல செஞ்சு வச்சது வேஸ்ட் ஆகிடுமேன்னு ஒரு நல்ல எண்ணத்துல தம் அடிச்சிக்கிட்டே அப்பார்ட்மெண்ட்டுக்கு வருது.

அதுக்கப்புறம் வீட்டு சாவி இல்லையா என்ன எழவோ. எல்லாப் பொருட்களையும் அப்பார்ட்மெண்ட் வாசலையே போட்டுட்டு உக்காந்திருக்கு. ஆனா அப்படி உட்காரப் போய்த்தான் அந்த நல்ல வாழ்ந்துக்கிட்டு இருக்கிற மூணு பேரைப் பார்க்க முடியுது. அவங்க மூணு பேர் ராசிலையும் உன்னை சனி பகவான் உக்கிரமா பார்ப்பான்னு போட்டிருக்கும் போல.

அப்புறம் 4 பேரும் நட்பாகுறாங்க. ரீட்டா ஒரு மொடாக்குடிகாரி. அத பார்த்து மிச்ச மூணு பேருக்கும் குடிக்கிற ஆசை வருது. எங்க பாட்டி, அம்மா காலத்துல பக்கத்து வீட்டுப் பொண்ணுங்க நகை, புடவை வாங்குனாத்தான் பொறாமை பட்டு இவங்களும் வாங்குவாங்க.

ஆனா இப்ப என்னடான்னா பக்கத்து வீட்டுப் பொண்ணு குடிக்குதுன்னு இவங்களும் குடிக்கிறாங்க. குடிக்கிறாங்க. தம் அடிக்கிறாங்க. ப்ரொடக்சன் யூனிட்ல உள்ள “குடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கானது” என எழுதி வச்ச ஸ்லைடையும் வேஸ்ட ஆக்காம யூஸ் பண்றாங்க.

அதுல கல்யாணம் ஆகாத பொண்ணு, தன் லவ்வருக்கு நாளைக்கு வேற கல்யாணம் பாண்டிச்சேரிலன்னு சொல்லி அழுது. அத தடுத்து நிறுத்த 4 பேரும் பாண்டி போறாங்க.

ஆனா மறுநாள் கல்யாணத்துக்கெல்லாம் போகாம சரக்கடிக்கப் போறாங்க. குடும்ப குத்துவிளக்குகள் முதல் முறையா அரைகுறை ஆடைகளைப் போட்டு பீச்சுல ஆடுதுங்க.

பாவம் ஒருநாள் சரக்கடிச்சிட்டு எஞ்சாய் பண்ணிட்டு கல்யாணத்த நிப்பாட்ட வரட்டுமேன்னு அவனுகளும் மறுநாள்க்கு மறுநாள்தான் கல்யாணத்தை வைக்கிறானுக. இவங்களும் போயி, பொண்ணு, மாப்பிள்ளை ரெண்டு பேரையும் கடத்திட்டு வந்திடுறாங்க.

என்னதான் படத்த கழுவி ஊத்தினாலும் இந்த இடத்தில் இயக்குநர் உயர்ந்துவிட்டார். எவ்வளவு ஒரு நல்ல மனம் இருக்க வேண்டும். சட்டத்தை மதித்தால் மட்டும் போதாது. தான் எடுக்கும் படத்திலும் அந்த சட்டத்தைப் பதிவு செய்ய வேண்டும் என நினைத்த இயக்குநருக்கு என்னை அறியாமலேயே எழுந்து நின்று மரியாதை செலுத்தினேன்.

ஆம் பொண்ணு, மாப்பிள்ளையைக் கடத்திட்டு வந்ததும், அந்த பொண்ணு ஓடி போய் கல்யாணப் பொண்ணைக் கட்டிப்பிடித்து லிப்லாக் செய்யுது.

ஆம் ஒரினபால் திருமணம் செல்லும் என இப்போதுதான சட்டம் வந்தது. புதிதாக வந்த சட்டத்தை மதித்து படம் எடுத்த இயக்குநருக்கு ஆஸ்கார் அவார்டுக்குப் பரிந்துரைக்க வேண்டும். ஆஸ்கார் ஃபார் அழகிய அசுரா ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்ய வேண்டும்.

சரி இதுக்கப்புறம் எல்லோர் வீடலையும் ரீட்டா கூட சேரக்கூடாதுன்னு சொல்றாங்க. ஆனா 4 பேரும் வீட்டுக்குத் தெரியாம மீட் பண்றாங்க. சரக்கடிக்கிறாங்க. தம் அடிக்கிறாங்க. கஞ்சா கூட அடிக்கிறாங்க.

அப்புறம் 4 பேரும் வீட்டுக்குத் தெரியாம மீட் பண்றாங்க. சரக்கடிக்கிறாங்க. தம் அடிக்கிறாங்க. கஞ்சா கூட அடிக்கிறாங்க.

அப்புறம் 4 பேரும் வீட்டுக்குத் தெரியாம மீட் பண்றாங்க. சரக்கடிக்கிறாங்க. தம் அடிக்கிறாங்க. கஞ்சா கூட அடிக்கிறாங்க.

என்னடா இத எத்தனவாட்டி சொல்லுவேன்னு கேக்குறீங்களா? நான் என்ன செய்ய? இது மட்டும்தான் படம்.

அப்புறம் க்ளைமேக்ஸ்ல சிம்பு வர்றார். எதோ டயலாக் சொல்றார். அதுல இம்ப்ரெஸ் ஆன ரீட்டா பச்சக்குன்னு அவருக்கு ஒரு லிப்லாக் கொடுக்குது. படத்துக்கு 90 எம்.எல்ன்னு வைக்கிறதுக்கு பதில் வாய்தான்னு வெச்சிருக்கலாம்.

தூள் படத்துல விவேக் சொல்வார் ஒருத்தன் பான்பராக் போட்டு என் தலைய நக்கிட்டான்னு. இந்தப் படம் பார்த்ததும் எனக்குத் தோணினது, இந்தப் படக்குழுவினர் நம்ம மூஞ்சில துப்பினாங்களா இல்லை நாம அவங்க மூஞ்சில துப்பனுமான்னு?

மொத்தத்துல, டெவலப்பரா சொல்லனும்ன்னா for loop-ல ஒரே சீனைப் போட்டு i=4 என ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க.

மொத்தத்துல இந்தப் படம் ஓவியா ஆர்மி மேல சர்ஜிகல் ஸ்ட்ரைக் பண்ணி இருக்கு. இனி ஓவியா ஆர்மினு எதுவும் மிச்சம் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு துல்லியமான தாக்குதல். ஓவியா ஆர்மிக்கே இந்த நிலைமைன்னா படம் பாத்த மத்தவங்கள்லாம் உசுரோட வருவாங்கன்னா நினைக்கிறீங்க?

#GoBackOviyaArmy

ரமேஷ் சுப்புராஜ்