
மருதம் விமர்சனம்
மருதம் என்பது வயலையும், வயல் சார்ந்த இடங்களையும் குறிக்கும் ஒரு நிலப்பிரிவைக் குறிக்கும் திணையாகும். தமிழ் சினிமாவில் விவசாயிகளை வைத்து, ‘விவசாயின்னா யார் தெரியுமா? அவன் சேத்துல கால் வைக்கலனா சோத்துல நாம கை வைக்க முடியுமா?’ என்பது போலவே உணர்வுகளைப் பிழிந்து, அதை வைத்து கல்லா கட்டி விட்டன பல படங்கள். ஆனால் கன்டென்ட்டுக்காக விவசாயியைப் பற்றி எடுக்காமல், விவசாயிகளின் யதார்த்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காட்டி, அத்தோடு அப்படி பல விவசாயிகள் சில மோசடி பேர்வழிகளிடம் சிக்கித் தங்கள் சொத்தை, வாழ்வை இழந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படமே மருதம் ஆகும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தன் சொந்த நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து, மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் விதார்த். அரசுப் பள்ளியை விட தன் மகன் தனியார் பள்ளியில் படித்தால் தான் அவன் வாழ்க்கை பிரக...










