32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

டிரம்ஸ் சிவமணி இசையில் ரொமான்டிக் க்ரைம் த்ரில்லர்

Dinesh R சேலம் Published: 20/02/2023 1 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜன் இயக்கும், முரளி ராம், தேவிகா கிருஷ்ணன் நடிப்பில், டிரம்ஸ் சிவமணி இசையில் உருவாகிறது புதுமையான ரொமாண்டிக் க்ரைம் த்ரில்லர் திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜன் புதுமையான திரைக்கதையில் மாறுபட்ட ரொமான்டிக் க்ரைம் த்ரில்லராக இப்படத்தை உருவாக்கவுள்ளார். உலகப்புகழ்பெற்ற இசை வித்தகர் டிரம்ஸ் சிவமணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கிரமாத்துப் பின்னணியில், மாறுபட்ட ரொமான்டிக் க்ரைம் த்ரில்லராக உருவாகும் இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும் புதிய அனுபவமாக இருக்கும்.

இப்படத்தில் நாயகனாக தொப்பி படம் மூலம் அறிமுகமான முரளி ராம் நடிக்கிறார். நாயகியாக தேவிகா கிருஷ்ணன் நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. படத்தினைப் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரபூர்வமாக படக்குழுவால் விரைவில் அறிவிக்கப்படும்.

தொழில்நுட்பக் குழு விபரம்

இயக்கம் தயாரிப்பு – ஷிவ நடராஜன்
ஒளிப்பதிவு – பிரகாஷ்
இசை – டிரம்ஸ் சிவமணி
கலை – நந்து
படத்தொகுப்பு – அகமது
புகைப்படம் – சந்துரு
நடனம் – அன்வர்
சண்டை – ஓம் பிரகாஷ்
மக்கள் தொடர்பு – A. ராஜா

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.