Shadow

Tag: Aadai movie

ஆடை விமர்சனம்

ஆடை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தப் படத்திற்கு, நேரடியாக 'நங்கேலி' என்றே தலைப்பு வைத்திருக்கலாம். அல்லது அவரது முதற்படம் போல் கவித்துவமாக ஒரு தலைப்பு வைத்திருக்கலாம். ஆனால், நேரடியாக உடை சுதந்திரம் பற்றிப் பேசும் ஆசையிலும், விளம்பரத்திற்காகவும் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் போல் இயக்குநர் ரத்னகுமார். ஆனால், இந்தத் தலைப்பே அவர் மறைக்கப் பார்க்கும் இஸத்தை (கொண்டையை) வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அவரது முதல் படமான மேயாத மான்-இல் ஒரு வசனம் வரும். 'வீடு விட்டா காலேஜ், காலேஜ் முடிஞ்சா வீடு, யாரிடமும் பேசாம, ஏன் கேன்டீனுக்குக் கூடப் போக மாட்டா. வீட்ல பார்த்த பையன் கூடவே என்கேஜ்மென்ட் பண்ணிக்கிறா-ன்னா அவ எவ்ளோ நல்லவ?’ என நாயகன் நாயகியைச் சிலாகிப்பான். நல்ல பெண் என்பதற்கு இயக்குநர், நாயகன் வாயிலாக முன் வைக்கும் இலக்கணம் அது. ஆடை படத்து அமலா பாலோ, இதற்கு முரணான பெண். நடுரோட்டில் ஒருவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப...