Yours Sincerely RAAM | ரமேஷ் அரவிந்த் & கோல்டன் ஸ்டார்
கன்னடத் திரையுலகில் ரசிகர்களின் அபிமானத்திற்குரிய நட்சத்திரங்களான 'மிஸ்டர் பர்ஃபெக்ட்' ரமேஷ் அரவிந்த் மற்றும் 'கோல்டன் ஸ்டார்' கணேஷ் ஆகிய இருவரும் முதன்முறையாக 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கௌரி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரூ கவுடா பாளையத்தில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கத்தில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. உற்சாகம் நிறைந்த இந்த விழாவில் நடிகையும் தொகுப்பாளருமான ஜானகி ராயலா கிளாப் அடிக்க, இயக்குநர் விக்யாத்தின் மனைவி சுவாதி விக்யாத் கேமராவை ஆன் செய்ய, முதல் காட்சி படமானது. இந்நிகழ்வில் 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டது.
இத்திரைப்படம் சமூகத்தில் நிலவும் வர்க்கத்தையும், மனித உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் உணர்வுபூர்வமான படைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கும் வகையில...