செப்டம்பர் 1 முதல் இந்தி ‘சூரரைப் போற்று’
தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்திப் பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. தமிழில் வெளியான இந்தத் திரைப்படம் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில், இந்தியில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ராதிகா மதன், பரேஷ் ரவால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்திய விமானப் படையில் பணியாற்றிய அதிகாரி கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகி இருக்கும் இந்தத் திரைப்...