Shadow

Tag: Action 2019

ஆக்‌ஷன் விமர்சனம்

ஆக்‌ஷன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பிற்குத் தகுந்தாற்போல் படம் முழுவதும் விஷாலின் முழு நீள ஆக்‌ஷன் மட்டுமே! சுநதர்.சி படங்களின் வழக்கமான கலகலப்பை எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றமே மிஞ்சும். தேர்தலில் நின்று முதல்வராக வேண்டிய அண்ணனையும், தனது காதலியையும் கொன்றவர்களைத் தேடி லண்டன், இஸ்தான்புல், அங்கிருந்து தரை மார்க்கமாகப் பாகிஸ்தான் வரை சென்று பழி தீர்க்கிறார் இந்திய ராணுவத்தின் கர்னலான சுபாஷ். படம் தொடங்கியதுமே, 'அட!' போட வைக்குமளவு டட்லியின் ஒளிப்பதிவில் இஸ்தான்புலின் நிலப்பரப்பு ஈர்க்கிறது. விஷால் யாரை ஏன் அடிக்கிறார் என்று தெரியாவிட்டாலும், இஸ்தான்புல்லின் குன்றுகளாலான ஏரியாவும், அந்த அடுக்கி வைத்தாற்போல் இருக்கும் குடியிருப்புகளும், மர்டர் மிஸ்ட்ரி போல் தொடங்கும் படம் நாயகனின் புஜபல பராக்கிரமத்தை மட்டுமே நம்பிப் பயணிக்கிறது. படத்தின் முக்கியமான திருப்பங்களை எல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் கடந்துள்ளது மிகக் கடியாக உ...