“சூரியை ஓட விட்ட அதிதி” – கார்த்தி | விருமன்
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’.
இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அச்சந்திப்பில் பேசிய விருமன் பட நாயகன் கார்த்தி, “இப்படத்தின் ட்ரைலர் வரும்வரை பதட்டமாகத்தான் இருந்தது. அயல் நாட்டு மொழிப் படங்களைப் பார்த்து நம் கலாச்சாரம் மாறி விட்டதோ? நமது மண் சார்ந்த படங்களுக்கு ஆதரவு இருக்காதோ? என்ற சந்தேகம் துவக்கத்தில் எங்களுக்குள் இருந்தது.
ஏனென்றால், தற்போது கிராமத்தில்கூட ஸ்விக்கி, ஸொமேட்டோ வந்துவிட்டது. ஆனால், இந்த ‘விருமன்’ படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ...