Shadow

Tag: Adutha Saattai movie review in Tamil

அடுத்த சாட்டை விமர்சனம்

அடுத்த சாட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பிலேயே கதை சொல்லிவிடுகின்றனர் சாட்டை படத்தின் இயக்குநர் அன்பழகன். அப்பா கலை கல்லூரியில், ஒரு டிப்பார்ட்மென்ட்டின் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவர்களின் வகுப்பில் கதை நிகழ்கிறது. சாதி வெறியில் ஊறிய பிரின்சிபல் சிங்க பெருமாளின் மகன் பழனியால் வகுப்பில் சாதிப் பிரிவினை ஏற்படுகிறது. படத்தின் முதற்பாதியில் மகன் திருந்தி விட, இரண்டாம் பாதியில் பிரின்சிபலும் திருந்தி விட படம் சுபமாய் முடிகிறது. சமுத்திரக்கனி முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி வரை சாட்டையை அட்வைஸ்களாகச் சுழற்றியபடியே உள்ளார். அவருக்கு இதே வேலையாகப் போய்விட்டதென அவர் சொல்வதை யாரும் காதில் வாங்கவேயில்லை. ஆனால், நாயகியான போதும்பொண்ணு, “நான் அந்த சாதியைச் சேர்ந்த பையனைக் காதலிக்கவில்லை. எனக்கு உன்னைத்தான் பிடிக்கும். அவனைக் கூடப் பிறந்தவனா நினைச்சுத்தான் பழகுறேன்” என்று நாயகனிடம் சொன்னதும், ஒட்டுமொத்த கல்லூரியிலுள்ள மாணவர்களுக்கும் சாத...